March 31:மறந்துடாதிங்க! மார்ச் 31க்குள் செய்ய வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்

By Pothy RajFirst Published Mar 24, 2022, 12:19 PM IST
Highlights

March 31:மார்ச் 31ம் தேதியுடன் நடப்பு நிதியாண்டு முடிவதால், அதற்கு வருமானவரித்துறை தொடர்பாக 4 முக்கிய விஷயங்களை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் உள்ளிட்ட பல்வேறு சிக்கலுக்கு ஆளாகநேரிடும்.

மார்ச் 31ம் தேதியுடன் நடப்பு நிதியாண்டு முடிவதால், அதற்கு வருமானவரித்துறை தொடர்பாக 4 முக்கிய விஷயங்களை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் உள்ளிட்ட பல்வேறு சிக்கலுக்கு ஆளாகநேரிடும்.

வருமானவரி செலுத்துவோருக்கு மார்ச் மாதம் மிகவும் முக்கியானதாகும். நிதியாண்டு முடிவுக்குள் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்வது, வரிச் சேமிப்புக்குரிய விவரங்களைத் தாக்கல் செய்வது, பான்கார்டு, ஆதார் எண் இணைத்தல் போன்றவை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.இந்த மாதம் முடிய இன்னும் 7 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் 4 முக்கிய விஷயங்களை மறந்துவிடாமல் செய்ய வேண்டும்.

ஐடிஆர் பைலிங்

2021-22 நிதியாண்டுக்கான வருமானவரி ரிட்டன் தாமதமாகத் தாக்கல் செய்யபவர்களுக்கான கடைசித் தேதி மார்ச் 31ம்தேதியாகும். வருமானவரி செலுத்தும் தனிநபர்கள் யாரேனும் ரிட்டன் தாக்கல் செய்யாமல் இருந்தால், மார்ச் 31ம் தேதிக்குள் ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கெனவே ஐடிஆர் தாக்கல் செய்தவர்களில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமென்றாலும் அதை மார்ச் 31ம்தேதிக்குள் செய்துவிடலாம்

கேஒய்சி அப்டேட்

வங்கிகளில் வாடிக்கையாளர் விவரங்களைத் தெரிந்து கொள்ளும் கேஒய்சி விவரத்தில் ஏதேனும் விவரங்களை சேர்க்க வேண்டும் என்றாலும் அதற்கு மார்ச் 31ம் தேதிதான் கடைசிநாளாகும். ஒமைக்ரான் பரவல் காரணமாக 2021 டிசம்பர் 31ம் தேதி கடைசித் தேதி2022, மார்ச் 31ம் தேதிவரை நீடிக்கப்பட்டது. ஆதலால், வங்கியில் கணக்கு வைத்திருப்போர் தங்களின் கேஒய்சி விவரங்களை முழுமையாக அப்டேட் செய்ய கடைசி தேதி மார்ச் 31ம் தேதியாகும். இல்லாவிட்டால் ஏப்ரல் 1ம்தேதி முதல் வங்கிக்கணக்கு செயல்பாடு நிறுத்திவைக்கப்படும்

ஆதார்-பான்கார்டு இணைப்பு

பான் கார்டு, ஆதார் கார்டு இணைப்பதற்கு பல கட்டங்களாக கால அவகாசத்தை மத்திய அரசு வழங்கியது. கடைசியாக கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அவகாசம் வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. இந்தத் தேதித்குள் பான்கார்டு வைத்திருப்பவர்கள் ஆதார் கார்டுடன் இணைக்காவிட்டால் அவர்களுக்கு வருமானவரிச் சட்டத்தின்படி ரூ.10ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும், பான்கார்டு முடக்கப்படும். பான் கார்டு இல்லாமல் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முடியாது, முதலீடு செய்திருந்தாலும் பரிவர்த்தனையில் ஈடுபடமுடியாது, டேமேட் கணக்கு தொடங்க முடியாது. ஆதலால் அபராதத்தை தவிர்க்க மார்ச் 31ம்தேதிக்குள் ஆதார் பான்கார்டு  இணைப்பு கட்டாயம் செய்ய வேண்டும்

பிரதமர் வீ்ட்டு மானியத் தொகை

கடந்த 2015ம்  ஆண்டு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற அமைச்சகம், நகர்ப்புற வறுமை ஒழிப்புத்திட்டத்தின் கீழ் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தை செயல்படுத்தியது. இதன்படி வீடு கட்டுவோருக்கு மானியம் வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் 3 கட்டங்களாக சிஎல்எஸ்எஸ் திட்டத்தை செயல்படுத்திவருகிறது. இதில் ஏற்கெனவே 2 கட்டங்கள் முடிந்தநிலையில் 3-வது கட்டமும் வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. ஆதலால், புதிய வீட்டுக்கு மானியம் பெற நினைப்போர் 31ம் தேதிக்குள் விண்ணிப்பக்கலாம்.

click me!