AED 10 மில்லியன் வெற்றியாளரை மஹசூஸ் கிராண்ட் டிரா கொண்டாடுகிறது

Published : Jun 23, 2022, 02:43 PM ISTUpdated : Jun 23, 2022, 02:45 PM IST
AED 10 மில்லியன் வெற்றியாளரை மஹசூஸ் கிராண்ட் டிரா கொண்டாடுகிறது

சுருக்கம்

மஹசூஸ் லைவ் டிராவில் 10 மில்லியன் திர்ஹாம்ஸ் வென்றுள்ளார் துருக்கி நாட்டை சேர்ந்தவர். இதுவரை மஹசூஸ் 23 நபர்களை கோடீஸ்வரராக்கியுள்ளது.  

ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகக்குறுகிய காலத்தில் மஹசூஸ் முன்னணி வாராந்திர டிராவாக வளர்ந்து, 23 கோடீஸ்வரர்களை உருவாக்கியிருக்கிறது. கடந்த வார கிராண்ட் டிராவில் மற்றுமொரு வெற்றியாளர் அதிகபட்ச பரிசுத்தொகையை வென்றுள்ளார். கடந்த 18ம் தேதி சனிக்கிழமை நடந்த டிராவில், துபாயில் வசித்துவரும் துருக்கி நாட்டை சேர்ந்த ஒருவர் 10 மில்லியன் திர்ஹாம்ஸ் ஜெயித்துள்ளார். வாழ்நாள் முழுவதுமான அவரது பண கவலையை இந்த பரிசுத்தொகை தீர்த்துவைத்துள்ளது.

எவிங்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசுத்தொகைக்கான காசோலையை பெற அந்த வெற்றியாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த நிகழ்வில் பேசிய எவிங்ஸின் சி.இ.ஓ ஃபரித் சாம்ஜி, மஹசூஸ் என்ற பெயர் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கும் பெயராகிவிட்டது. இதுவரை 23 கோடீஸ்வரர்களை உருவாக்கியிருக்கிறோம்; அதுவும் வெறும் இரண்டே ஆண்டில் இதை செய்து காட்டியிருக்கிறோம். பல பேரின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறோம். எஞ்ஜின்(கடந்த வார வெற்றியாளர்) அதிர்ஷ்டசாலி. மஹசூஸ் கிராண்ட் டிராவில் வெற்றி பெற்றதற்கு அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் எனது வாழ்த்துக்கள் என்று கூறினார் ஃபரித்.

வெற்றி குறித்து பேசிய எஞ்ஜின், கனவு நனவான தருணம் இது. இவ்வளவு பெரிய தொகையை நான் ஜெயிப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இந்த வெற்றியும் பரிசுத்தொகையும் உண்மையாகவே எனது வாழ்வை மாற்றப்போகிறது. என் வாழ்வில் புதிய ஒளியை ஏற்றிவைத்த மஹசூஸுக்கு எனது நன்றிகள் என்று வெற்றியாளர் எஞ்ஜின் கூறியுள்ளார்.

www.mahzooz.ae என்ற இணையதளத்தில் பதிவு செய்து மஹசூஸ் லைவ் டிராவில் கலந்துகொள்ளலாம். AED 35 செலுத்தி பதிவுசெய்து இந்த மஹசூஸ் லைவ் டிராவில் விளையாடி AED 100,000  என்ற பெரும் தொகையை வீட்டிற்கு எடுத்து செல்லலாம்.

மஹசூஸ் என்றால் அரேபிய மொழியில் அதிர்ஷ்டம் என்று அர்த்தம். GCC-யின் முதல் வார லைவ் டிரா, AED மில்லியன்களை வென்று போட்டியாளர்களின் வாழ்வையே மாற்றவல்ல வாய்ப்பை ஒவ்வொரு வாரமும் ஏற்படுத்தி கொடுக்கிறது. மஹசூஸ் மக்களின் கனவுகளை நனவாக்குகிறது.
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக இந்தியா வளர 30 ஆண்டுகள் ஆகலாம்: ரகுராம் ராஜன்
IndiGo: 10,000 கார்கள், 9,500 ஹோட்டல் அறைகள், ரூ.827 கோடி ரீஃபண்ட்... மீண்டும் மீண்டு வந்த இண்டிகோ!