7th Pay Commission : ஜாக்பாட்! மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் அகவிலைப்படி( DA) உயர்வு?

By Pothy Raj  |  First Published Jun 23, 2022, 2:31 PM IST

7th Pay Commission latest news :மத்திய அரசு ஊழியர்கள் 7-வது சம்பளக்கமிஷன்(7th Central Pay Commission) படி அகவிலைப்படி உயர்வு(DA) ஜூலை மாதத்தில் இருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மத்திய அரசு ஊழியர்கள் 7-வது சம்பளக்கமிஷன்(7th Central Pay Commission) படி அகவிலைப்படி உயர்வு(DA) ஜூலை மாதத்தில் இருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த முறை மத்திய அரசு ஊழியர்களின் பிட்மென்ட் ஃபேக்டர் படி,(Fitment factor) அடிப்படை ஊதியமும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

Tap to resize

Latest Videos

ஆண்டுக்கு இரு முறை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஜனவரியிலும், ஜூலை மாதத்திலும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த அகவிலைப்படியும் ஜூலை மாதத்தில் சேர்த்து வழங்கப்படும் எனத் தெரிகிறது. கொரோனா தொற்றால்(covid19) 2020 மே முதல் 2021, ஜூன் 30ம் தேதி வரை அகவிலைப்படி(DA) உயர்வு நிறுத்தப்பட்டிருந்தது.

இதற்கிடையே ஊழியர்களுக்கு ஊதியத்தை 7-வது சம்பளக் கமிஷன்படி(7th Central Pay Commission) பிட்மென்ட் ஃபேக்டர்படி வழங்க ஒப்புதல் அளிக்கும் எனத் தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்கள் பி்ட்மென்ட் ஃபேக்டர்படி ஊதியத்தை 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம்(basic pay) ரூ.18ஆயிரத்திலிருந்து ரூ.26 ஆயிரமாக உயரும்.

2017ம் ஆண்டு மத்திய அரசு ஊதியத்தை உயர்த்தியது. இதனால் அடிப்படை ஊதியம் ரூ.7ஆயிரத்திலிருந்து ரூ.18ஆயிரமாக அதிகரித்தது. பிட்மென்ட் ஃபேக்டர்(fitment factor) படி உயர்த்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதார்கள்அனைவரும் அடிப்படை ஊதிய உயர்வுடன், அகவிலைப்படி(DA) உயர்வையும் சேர்த்துப் பெறுவார்கள். அவ்வாறு ஊதியம் பெற்றால் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதம் ஜாக்பாட்டாக இருக்கும் 

பிட்மென்ட் ஃபேக்டர் (fitment factor)என்றால் என்ன

பிட்மென்ட்ஃபேக்டர் என்பது, 6-வது ஊதியக் குழுவின் அடிப்படை ஊதியத்தை, திருத்தப்பட்ட 7-வது ஊதியக்குழுஅமைப்போடு பெருக்கி வரும் தொகையாகும். 7-வது ஊதியக் குழுவில் பிட்மென்ட் ஃபேக்டர் (fitment factor)2.57 எனநிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிட்மென்ட் ஃபேக்டர் உயர்ந்தால், ஊழியர்களின் ஊதியமும் தானாக உயர்ந்துவிடும்.

உதாரணமாக தற்போது மத்திய அரசு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ18ஆயிரம். பிட்மென்ட் ஃபேக்டர் (fitment factor)படி 2.57 பெருக்கினால், ரூ.46,260ஆக அதிகரிக்கும். பிட்மென்ட் பேக்டர் 3.68 ஆக உயர்த்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்கள் ஊதியம் ரூ.95,680ஆக உயரும்

click me!