
மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்கார்பியோ மாடல் நீண்ட காலமாமக உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ மாடலுக்கான ஸ்பை படங்கள் 2019 முதல் இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மஹிந்திரா புதிய ஸ்கார்பியோ மாடலுக்கான இறுதிக்கட்ட சோதனைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
புதிய ஸ்கார்பியோ மாடல் இந்த ஆண்டு முதல் அரையாண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் முற்றிலும் புதிய வெளிப்புற டிசைன், உள்புறம் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த கார் முழுமையாக மாற்றப்படுவது இதுவே முதல் முறை ஆகும். 2022 ஸ்கார்பியோ முற்றிலும் புதிய மாடலாக இருக்கும். மேலும் இது தற்போது விற்பனை செய்யப்படும் மாடலை விட அளவில் பெரியதாக இருக்கிறது. புதிய ஸ்கார்பியோ மாடலின் உள்புறம் அதிக பிரீமியம் அனுபவத்தை கொண்டிருக்கும் என தெரிகிறது. இதன் பெரம்பாலான அம்சங்கள் புதிய XUV700 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இரண்டாம் தலைமுறை ஸ்கார்பியோ மாடல் மேம்பட்ட லேடர் ஃபிரேம் சேசிஸ் கொண்டிருக்கிறது. இதே சேசிஸ் புதிய தார் மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் பவர்டிரெயின் ஆப்ஷன்களும் தார் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதிய ஸ்கார்பியோ மாடலில் 2 லிட்டர் பெட்ரோல், 2.2 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்படலாம்.
இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் என இருவித கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை மஹிந்திரா வழங்கும் என தெரிகிறது. மேலும் டாப் எண்ட் மாடல்களில் ஆல்-வீல் டிரைவ் வசதியும் வழங்கப்படலாம். புதிய ஸ்கார்பியோ மாடலில் 7-சீட் வடிவில் வழங்கப்படும். இதன் மூன்றாம் அடுக்கு இருக்கைகள் முன்புறம் பார்த்தப்படி பொருத்தப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.