
பெண்களிடையே சேமிப்புப் பழக்கத்தை வளர்க்கும் நோக்கில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய பாதுகாப்பான முதலீட்டுத் திட்டம்தான் மகளிர் சம்மான் சேமிப்புப் பத்திரம். 2023 மார்ச் 31 அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியப் பெண்களுக்காக இந்த சிறு சேமிப்புத் திட்டத்தை அறிவித்தார். 2025 மார்ச் 31ல் இத்திட்டம் முடிவடைகிறது. அதாவது, 2025 பட்ஜெட்டில் மகளிர் சம்மான் சேமிப்புப் பத்திரத் திட்டத்தின் நீட்டிப்பு எதையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கவில்லை. இத்திட்டத்தில் முதலீடு செய்ய பெண் முதலீட்டாளர்களுக்கு 2025 மார்ச் வரை மட்டுமே அவகாசம் உள்ளது. இத்திட்டத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.
மகளிர் சம்மான் சேமிப்புப் பத்திரம்
எந்த வயதுப் பெண்களும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டுத் தொகை 2 லட்சம் ரூபாய். 7.5% வரை வட்டி கிடைக்கும். வருமான வரிச் சலுகைகளும் பெண்களுக்குக் கிடைக்கும். செக்ஷன் 80சி-ன் கீழ் முதலீடு செய்யும் தொகைக்கு 1.50 லட்சம் ரூபாய் வரை விலக்குப் பெறலாம். இந்திய அஞ்சல் துறை தவிர, ஒரு சில வங்கிகளும் மகளிர் சம்மான் சேமிப்புப் பத்திரங்களை வழங்குகின்றன. பாங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பிஎன்பி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை இதில் அடங்கும்.
வட்டி
மகளிர் சம்மான் சேமிப்புப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 7.5% வரை வட்டியை அரசு உறுதியளிக்கிறது. பெண்களுக்கான முதலீட்டுத் திட்டங்களில் அதிக வட்டி கிடைக்கும் திட்டங்களில் இதுவும் ஒன்று. குறைந்த காலத்தில் முதலீடு செய்தாலும் பெண்கள் நல்ல வருமானம் ஈட்டலாம்.
காலம்
இது ஒரு சிறு சேமிப்புத் திட்டம். இத்திட்டத்தில் முதலீட்டாளர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச முதலீட்டுத் தொகை 2 லட்சம் ரூபாய்.
யார் யார் கணக்குத் தொடங்கலாம்
பெண்களைச் சுயசார்புடையவர்களாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் முதலீட்டுத் திட்டம் இது. மகளிர் சம்மான் சேமிப்புப் பத்திரத் திட்டத்தில் 10 வயது அல்லது அதற்குக் குறைவான வயதுடைய சிறுமிகளுக்கும் கணக்குத் தொடங்கலாம் என்பது இத்திட்டத்தின் மற்றொரு சிறப்பு.
முதலீடு
மகளிர் சம்மான் சேமிப்புப் பத்திரத் திட்டத்தில் 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், முதல் ஆண்டில் 7.5% வட்டி கிடைக்கும். முதல் ஆண்டின் வட்டித் தொகை 15,000 ரூபாய். அடுத்த ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் மொத்தத் தொகைக்குக் கிடைக்கும் வட்டி 16,125 ரூபாய். அதாவது, இரண்டு ஆண்டுகளில் 2 லட்சம் ரூபாய் முதலீட்டிற்கு மொத்தம் 31,125 ரூபாய் வட்டி கிடைக்கும்.
மே 5 முதல் வாட்ஸ்அப் வேலை செய்யாது.. உங்க மொபைல் லிஸ்டில் இருக்கா?
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.