
வீடுகளில் சமையலுக்குப் பயன்படுத்தும் 14 எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை ஏறக்குறைய ஆயிரம் ரூபாயை நெருங்கிவிட்டதால், சிலிண்டர் முன்பதிவு செய்ய பெண்கள் தயங்குவதாக சிலிண்டர் முகவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விலை உயர்வு
வீடுகளில் சமையலுக்குப் பயன்படுத்தும் சிலிண்டர் விலை மாதத்தில் 1ம் தேதி மற்றும் 15ம் தேதிகளில் உயர்த்தப்படும். அந்த வகையில் கடைசியாக பிப்ரவரி மாதம் ரூ.50 உயர்த்தப்பட்டது அதன்பின் மாணிய சிலிண்டர் விலை உயர்த்தப்படவி்ல்லை
ஆயிரத்தை தொட்டவிலை
தற்போது சென்னையில் சிலிண்டர் விலை ரூ.976க்கு விற்பனையாகிறது. இந்த சிலிண்டரை வீட்டுக்கு எடுத்துவரும் டெலிவரி நபருக்கு ரூ.20 டிப்ஸ் வழங்கும்பட்சத்தில் ஏறக்குறைய ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. ஒரு சிலிண்டர்விலை ஆயிரத்தை தொட்டுவிட்டதால் வழக்கமாக முன்பதிவு அளவு குறைந்துவிட்டதாக முகவர்கள் தெரிவிக்கிறார்கள்
தயக்கம்
சென்னையில் சிலிண்டர் முகவர் கூறுகையில் “ மாதத்தின் முதல் 15 நாட்களில் சிலிண்டர் முன்பதிவு விறுவிறுப்பாக இருக்கும். ஆனால், மார்ச் மாதத்தில் மிகவும் மந்தமாக இருந்தது, இந்த மாதத்திலும் அப்படியே நீடிக்கிறது. சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயை எட்டிவிட்டதால், மக்கள் சிலிண்டர் முன்பதிவு செய்ய தயங்குகிறார்கள்” எனத் தெரிவித்தார்
விலை உயர்வு கூடாது
சென்னை திநகரைச் சேர்ந்த கோமளா என்பவர் கூறுகையில் “ சிலிண்டர் கொண்டுவருபவருக்கு ரூ.20 சேர்க்கும்போது சிலிண்டர் விலை ரூ.996க்குஉயர்ந்துவிட்டது. இப்படியெல்லாம் சமையல் சிலிண்டர் விலையை அ ரசு உயர்த்தக்கூடாது” எனத் தெரிவித்தார்
மானியம் தேவை
மற்றொரு முகவர் கூறுகையி்ல் “ எல்பிஜி சிலிண்டர் அத்தியாவசிப் பொருளாகிவிட்டது. இதற்கு நாடுமுழுவதும் ஒரேமாதிரியான மானியம் அளிக்க வேண்டும். இந்த சிலிண்டரில் லாபம் பார்க்க கூடாது. ஆனால், எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தரப்பில் கூறுகையில் சிலிண்டர் விலை இன்னும் ரூ.260வரை உயரும் எனத் தெரிகிறது. சிலிண்டர் விலை உயர்வு குறிப்பிட்ட தரப்பு மக்களை வெகுவாகப் பாதிக்கிறது” எனத் தெரிவித்தார்
விறகு அடுப்பு
கண்ணகி நகரைச் சேர்ந்த லட்சுமி கூறுகையில் “ சிலிண்டர்விலை உயர்வால் சிலிண்டரில் அதிகமாக சமையல் செய்வதைக் குறைத்துவிட்டேன். பதிலாக விறகு அடுப்பில் சமைக்கிறேன். ஒருநாளுக்கு 2முறை சமைப்போம். இப்போது ஒருவேளையை விறகு அடுப்பில்தான் சமைக்கிறேன். சிலிண்டர் பயன்பாட்டை 40 நாட்கள்வரை நீட்டிக்க வேண்டியிருக்கிறது” எனத் தெரிவித்தார்
இயல்புதான்
மற்றொரு சிலிண்டர் முகவர் கூறுகையில் “ பொதுவாக கோடை காலத்தில் சிலிண்டர் முன்பதிவு மந்தமாகத்தான் இருக்கும். மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிடுவதாலும், பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை விடுவதாலும், உணவுப் பழக்கத்தில் ஏற்படும் மாற்றமும் சிலிண்டர் முன்பதிவு குறையக் காரணமாக இருக்கலாம். சிலிண்டர் தேவை குறையும்போது விலையும் குறையலாம். ஆனால் இப்போதுநிலைமை வேறு” எனத் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.