இந்தியாவில் உள்ள 7 பெரும் பணக்கார குடும்பங்கள் குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் சுமார் 302.4 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்கின்றன. ஆனால் சில குடும்பங்கள் மட்டுமே சமூகத்தின் உயர் வர்க்கத்தினராக உள்ளனர். லட்சக்கணக்கான குடும்பங்களில் சில குடும்பங்கள் மட்டும் பெரும் செல்வத்துடன் பணக்கார குடும்பங்களாக உள்ளன. வலுவான வேர்கள் மற்றும் வித்தியாசமான கதைகளுடன் இந்த வணிகக் குடும்பங்கள் ஒவ்வொன்றும் தங்கள் திறமைகளுடன் நீண்ட தூரம் வந்து, அதன் செல்வத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்துகின்றன, தங்கள் பாரம்பரியத்தை விட்டுச் செல்கின்றன. அந்த வகையில் இந்தியாவில் உள்ள 7 பெரும் பணக்கார குடும்பங்கள் குறித்து பார்க்கலாம்.
அம்பானி குடும்பம்
அம்பானி குடும்பம், ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் ஆடம்பரமான விருந்துகளுக்காக தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து வருகிறது. அம்பானி சாம்ராஜ்யத்தின் முக்கிய மைல் கல்லாக கருதப்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திருபாய் அம்பானியால் நிறுவப்பட்டது. இஷா அம்பானி, ஆனந்த் அம்பானி, மற்றும் ஆகாஷ் அம்பானி உள்ளிட்ட மூன்றாம் தலைமுறையினர் தற்போது அவர்களின் தொழிலை நிர்வகித்து வருகின்றனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் தலைவர் முகேஷ் அம்பானி, மே 2023 நிலவரப்படி $87.2 பில்லியன் நிகர மதிப்புடன் ஆசியாவின் பணக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கோத்ரேஜ் குடும்பம்
பாரம்பரியம் மற்றும் புதுமைகளில் வேரூன்றிய கோத்ரேஜ் குடும்பத்தின் பாரம்பரியம் 124 ஆண்டுகளுக்கு முந்தையது. அர்தேஷிர் கோத்ரெஜ் 1897 ல் அவர்களின் பயணத்தைத் தொடங்கினார், இன்று ஆதி கோத்ரெஜ் அந்நிறுவனத்தின் தலைமை பொறூப்பில் இருக்கிறார். நுகர்வோர் பொருட்கள் தொடங்கி ரியல் எஸ்டேட் வரை பல்வேறு துறைகளில் கோத்ரெஜ் குழுமம் தொடர்ந்து செழித்து வருகிறது. கோத்ரேஜ் நுகர்வோர் தயாரிப்புகளை . நிசாபா கோத்ரெஜ் மேற்பார்வையிடுகிறார். அதே சமயம் பிரோஜ்ஷா கோத்ரேஜ் கோத்ரெஜ் சொத்துக்களை நிர்வகித்து வருகிறார். கோத்ரேஜ் குடும்பத்தின் நிகர மதிப்பு, 2022 ல், $13.9 பில்லியனாக இருந்தது.
பிர்லா குடும்பம்
பாரம்பரியம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றின் உருவகமாக ஆதித்ய பிர்லா குழுமம் கருதப்படுகிறது. சேத் ஷிவ் நாராயண் பிர்லா பருத்தி வர்த்தகத்தில் தங்கள் பயணத்தைத் தொடங்கிய 1857 ஆம் ஆண்டிலிருந்து இந்த குடும்பத்தின் வணிக பயணம் தொடங்கியது. குமார் மங்கலம் பிர்லா இப்போது உலோகங்கள், சிமெண்ட், நிதி, தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை வணிகம் உள்ளிட்ட ஆர்வமுள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். குடும்பத்தின் நிகர மதிப்பு $15.5 பில்லியன் ஆகும். மேலும், குமார் மங்கலம் பிர்லாவின் மகளான அனன்யா பிர்லா, தனது இசையால் சர்வதேச அரங்கில் கலக்கி வருகிறார்.
அதானி குடும்பம்
சாதாரணமாக தனது தொழில் பயணத்தை தொடங்கிய கௌதம் அதானி, தற்போது மிகப்பெரிய தொழிலதிபராக மாறி உள்ளார். அம்பானி தனது வணிகத்தை பல்வேறு துறைகளில் விரிவுப்படுத்தி உள்ளார். மேலும் அவரது மகன்கள் ஜீத் மற்றும் கரண் அதானி ஆகியோர் அதானி குழுமத்தின் வளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கௌதமின் மனைவி ப்ரீத்தி அதானி, அதானி அறக்கட்டளைக்கு தலைமை தாங்கி, குடும்பத்தின் அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார். ஃபோர்ப்ஸ் 2022 இன் படி அதானி குடும்பத்தின் நிகர மதிப்பு $150 பில்லியன் ஆகும்.
பஜாஜ் குடும்பம்
ஜம்னாலால் பஜாஜ் 1926ல் பஜாஜ் குழுமத்தை நிறுவினார். முன்னணி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் உலகளாவிய நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, பஜாஜ் குடும்பத்தின் மொத்த நிகர மதிப்பு $14.6 பில்லியன், அவர்கள் இந்தியாவின் பணக்காரர்களில் உயர் தரவரிசையில் உள்ளனர்.
டாடா குடும்பம்
இந்தியாவின் தொழில்துறை நிலப்பரப்பில் டாடா குடும்பத்தின் பங்களிப்பு அளவிட முடியாதது. ஜாம்ஷெட்ஜி டாடா அடித்தளம் அமைத்தார், மேலும் நவீன சவால்களின் மூலம் கூட்டமைப்பை வழிநடத்துவதில் ரத்தன் டாடா முக்கிய பங்கு வகித்தார். அவர்களின் நலன்கள் பல துறைகளில் பன்முகப்படுத்தப்பட்டதால், டாடா குடும்பத்தினர் ஒரு மரியாதைக்குரிய மற்றும் செல்வாக்குமிக்க குடும்பமாக தங்கள் இடத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். IIFL Wealth Hurun India Rich List 2022 இன் படி ரத்தன் டாடாவின் நிகர மதிப்பு ரூ. 3800 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. டாடா சன்ஸ் அவரது சொத்துக்களில் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது.
மிஸ்திரி குடும்பம்
மிஸ்திரி குடும்பத்தின் ஷபூர் பல்லோன்ஜி குழுமம் 1865 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கட்டுமானம், ரியல் எஸ்டேட், டெக்ஸ்டைல்ஸ், ஷிப்பிங் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய குழுமத்தை ஷபூர் மிஸ்திரி வழிநடத்துகிறார். இளைய மகன் சைரஸ் மிஸ்திரி, 2012 முதல் 2016 வரை டாடா குழுமத்தின் தலைவராக இருந்தார், இது குடும்பத்தின் பரவலான செல்வாக்கைப் பிரதிபலிக்கிறது. பல்லோன்ஜி மிஸ்திரியின் மகன் ஷபூர் மிஸ்திரி, ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தை நிர்வகித்து வருகிறார், இதன் நிகர மதிப்பு சுமார் 32 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.