
டுகாட்டி எக்ஸ் டையவெல் லிமிடெட் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் உலகம் முழுக்க 500 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. எக்ஸ் டையவெல் டார்க் மற்றும் எக்ஸ் டையவெல் எஸ் மாடல்களுடன் புதிய லிமிடெட் எடிஷன் மாடலும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
புதிய எக்ஸ் டையவெல் லிமிடெட் எடிஷன் மாடல் இத்தாலியை சேர்ந்த Poltrona Frau நிறுவனத்துடன் இணைந்து டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிறுவனம் விலை உயர்ந்த கார் மற்றும் விமானங்களுக்கு இருக்கைகளை செய்து கொடுக்கிறது. புதிய எக்ஸ் டையவெல் நெரா எடிஷன் மாடலிலும் சீட்களும் இந்த நிறுவனத்தின் சிறப்புகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஃபேன்சி சேடிலில் ஸ்போர்ட் தீம் கொண்ட சிவப்பு நிறத்தில் ஸ்பெஷல் எடிஷன் எக்ஸ் டையவெல் மாடல் அட்டகாசமாக காட்சியளிக்கிறது. இதன் சீட் நிறமும், மோட்டார்சைக்கிள் நிறத்துடன் மேட்ச் செய்யும் வகையில் சிவப்பு நிறத்தில் ஸ்டிட்ச் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் மொத்தத்தில் சியம் ரெட், ஸ்டீல் புளூ, சிமெண்டோ, இந்தியா மற்றும் செல்வா என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
மோட்டார்சைக்கிள் நிறத்திற்கு ஏற்ப மேட்ச் செய்யக்கூடியி கீ ரிங் மற்றும் டாக்யூமெண்ட் ஹோலடர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் இந்த மாடலில் பல்வேறு X லோகோக்கள் என்கிரேவ் செய்யப்பட்டு உள்ளன. காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த மாடலில் 160 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1262சிசி, வி டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை ஃபுல் எல்.இ.டி. லைடடிங், டி.ஆர்.எல். டை-டைம் ரன்னிங் லைட் சிஸ்டம், டுகாட்டி டிராக்ஷன் கண்ட்ரோல், ரைடிங் மோட்கள், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் டுகாட்டி பவர் லான்ச் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கிறது.
புதிய டுகாட்டி எக்ஸ் டையவெல் ஸ்பெஷல் எடிஷன் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாலின் வினியோகம் வரும் மாதங்களில் துவங்கும் என தெரிகிறது. டுகாட்டி எக்ஸ் டையவெல் ஸ்பெஷல் எடிஷன் மாடல்களில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு எத்தனை யூனிட்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.