
எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு இன்று மேலும் 4 சதவீதம் சரிந்ததையடுத்து, முதலீட்டாளர்கள் ரத்தக்கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான லாக்கின் காலமான 30ம் தேதி இன்றுடன் முடிந்துவிட்டது. இனிமேல் அவர்கள் தங்களிடம் இருக்கும் எல்ஐசி பங்குகளை சுதந்திரமாக விற்கலாம் என்பதால், பங்குவிலை கடுமையாகச் சரிந்தது.
கடந்த மாதம் 17ம் தேதி எல்ஐசி பங்கு பட்டியலிடும்போது ஒரு பங்கு மதிப்பு ரூ.949ஆக இருந்தது. அதுமுடல் இப்போது வரை எல்ஐசி பங்கு மதிப்பு 28 சதவீதம் சரிந்துள்ளது.
எல்ஐசி பங்கு ஒதுக்கீடு செய்யும்போது, சில்லரை முதலீட்டாளர்கள், எல்ஐசி ஊழியர்களுக்கு ஒரு பங்கு ரூ.905 ஆகவும், பாலிசிதாரர்களுக்கு ரூ.849ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இப்போது எல்ஐசி பங்கு விலை ரூ.681ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடம்போது ரூ.6 லட்சம் கோடியாக இருந்தது. பட்டியலிடப்பட்டதிலிருந்து தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. அதிலும் கடந்த 10 நாட்களாக எல்ஐசி பங்கு மதிப்பு 19% சரிந்து சந்தை மதிப்பிலிருந்து ரூ.1.20 லட்சம்கோடி இழந்துள்ளது.
எல்ஐசி நிறுவனம் ஆங்கர் முதலீட்டாளர்ளிடம் இருந்து ஐபிஓ மூலம் ரூ.5,627 கோடி வசூலித்தது. மற்ற 71 சதவீதம் தொகை பரஸ்பர நிதித்திட்டங்கள் வாயிலாக வந்தது. ஏறக்குறைய எல்ஐசி நிறுவனம் 5.93 கோடி பங்குகளை 123 முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கு ரூ.949க்கு விற்பனை செய்தது.
ஆங்கர் முதலீட்டாளர்கள் பங்கு வாங்கியதிலிருந்து அடுத்த 30 நாட்கள் லாக்கின் காலமாகும். இந்தக் காலத்தில் அவர்கள் பங்கின் மதிப்பை ஆய்வு செய்யலாம் ஆனால் விற்கக்கூடாது. ஆனால் லாக்கின் காலம் 30 நாட்கள் முடிந்தபின், அவர்கள் பங்குகளை விற்பனை செய்யலாம்.
எல்ஐசி பங்குகள் தொடர்ந்து சரிந்து வருவதால், ஆங்கர் முதலீட்டாளர்கள் இனிமேல் எல்ஐசி பங்குகளை விற்பனை செய்யவே அதிகமான ஆர்வம் காட்டுவார்ள். எதிர்பார்த்த அளவு எல்ஐசி நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டவில்லை என்பதால், விற்பனை செய்யலாம். அப்போது பங்கு மதிப்பு மேலும் சரியக்கூடும்.
மத்திய அரசு தன்னிடம் இருக்கும் 3.5 சதவீத பங்குகளை விற்பனை செய்து ரூ.21 ஆயிரம் கோடிமுதலீடு திரட்டியது. இதில் ஒரு சதவீத பங்குகள் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.