மார்ச் காலாண்டில் எல்.ஐ.சியின் அசுர வளர்ச்சி! நிகர லாபம் 5 மடங்கு உயர்வு!

By SG BalanFirst Published May 25, 2023, 10:44 PM IST
Highlights

2023 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் சந்தை மதிப்பும் ரூ.6,356.63 கோடி உயர்ந்துள்ளது.

சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் நிகர லாபம், 5 மடங்கு உயர்ந்து ரூ.13,191 கோடி அதிகரித்துள்ளது.

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் சந்தை மதிப்பும் மார்ச் மாதம் முடிந்த நான்காவது காலாண்டின் முடிவில் ரூ.6,356.63 கோடி உயர்ந்து ரூ.3,81,776.86 கோடி அதிகரித்திருக்கிறது. இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் எல்ஐசி ரூ.2,409 கோடி லாபம் ஈட்டியிருந்தது.

இருந்தாலும் மார்ச் காலாண்டில் மொத்த வருவாய் ரூ.2,15,487 கோடியில் இருந்து ரூ.2,01,022 கோடியாக குறைந்திருக்கிறது என என்று எல்.ஐ.சி தெரிவித்துள்ளது. 2022-23 நிதியாண்டில், எல்ஐசி நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.4,125 கோடியாக இருந்தது. இது மலைக்க வைக்கும் அளவுக்கு பல மடங்கு அதிகரித்து ரூ.35,997 கோடியாக உச்சம் அடைந்துள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7% ஐ தாண்டும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் கணிப்பு

2023ஆம் நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டின்போது எல்ஐசியின் வருடாந்திர லாபம் ரூ.15,952 கோடியாக உயர்ந்தது. செப்டம்பர் மாத இறுதியில் பங்குதாரர்கள் கணக்குக்கு ரூ.15.03 லட்சம் கோடி பரிமாற்றப்பட்டது.

இதன் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தையில் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் விலை 1.69 சதவீதம் அதிகரித்துள்ளது. புதன்கிழமை வர்த்தக நேர முடிவில் ஒரு பங்கின் விலை 603.60 ரூபாயாகக் காணப்பட்டது. பகல் நேர வர்த்தகத்தில் ஒரு பங்கின் விலை 3.72 சதவீதம் வரை உயர்ந்து, ரூ.615.65 வரை சென்றது. தேசிய பங்குச் சந்தையில் எல்ஐசி பங்குகள் விலை 1.62 சதவீதம் கூடி, 603.55 ரூபாயாக முடிந்தது.

ரூ. 2000 நோட்டை வங்கியில் மாற்ற போறீங்களா? எந்தெந்த வங்கியில் என்னென்ன விதிகள்? தெரிந்து கொள்ளுங்கள்

 

click me!