எல்ஐசியில் வெறும் 75 ரூபாய் கட்டினால் ரூ.14 லட்சம் கிடைக்கும்! பெண் குழந்தைகளுக்கு பெஸ்ட் இன்சூரன்ஸ்!

By SG BalanFirst Published Jun 18, 2024, 4:32 PM IST
Highlights

பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக எல்ஐசி சார்பில் ஆதார் ஷீலா, கன்யாதான் என இரண்டு தனித்துவமா காப்பிட்டுத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இவை பெண் குழந்தைகளுக்குப் பொருளாதார பாதுகாப்பைக் கொடுக்கின்றன.

பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக எல்ஐசி வழங்கும் சிறந்த திட்டம் எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம். தனித்துவமான இந்த காப்பிட்டுத் திட்டம் பெண் குழந்தையின் குடும்பத்திற்கே தேவையான பொருளாதார பாதுகாப்பை வழங்குகிறது.

ஆதார் ஷீலா திட்டத்தின்கீழ், தினமும் 87 ரூபாய் முதலீடு செய்தாலே போதும். இறுதியில் முதிர்வுத் தொகையாக ரூ.11 லட்சம் வரை கிடைக்கும். 15 வருட பாலிசி காலத்தை தேர்வு செய்தால், காப்பீட்டு தொகை ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கும்.

Latest Videos

பாலிசி காலத்தை முழுமையாக முடித்தால், முதிர்வுத்தொகை வழங்கப்படும். இந்த பாலிசியை வைத்து 90% வரை கடனாகவும் பெற முடியும். வருமான வரி பலன்களும் பெற முடியும்.

எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம் பெண்களுக்கு மட்டும் உள்ள பிரத்யேகத் திட்டம். இதில் 8 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் இணையலாம். 10 முதல் 20 வருடங்களுக்கு பாலிசி எடுக்கலாம்.

ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், மின்சாரக் கட்டணம், ரேஷன் கார்டு, வருமான வரி அறிக்கை போன்றவை ஆவணங்களைச் சமர்ப்பித்து ஆதார் ஷீலா காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம்.

மொபைல் பிரைவசி இல்லையா... செல்போன் செயலிகளை ரகசியமாக பயன்படுத்த நிறைய வழி இருக்கு!

கன்யாதான் பாலிசி:

எல்ஐசியின் முக்கிய மற்றொரு திட்டம் கன்யாதான் பாலிசி. இத்திட்டத்தில் வெறும் 75 ரூபாய் மட்டும் முதலீடு செய்தால் போதும். இந்த பாலிசி முதிர்வடையும் போது ரூ.14 லட்சம் கிடைக்கும்.

இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் காப்பீடு பெறலாம். முதலீட்டுக்கு உச்சவரம்பு இல்லை. பெண் குழந்தையின் தந்தைக்கு குறைந்தபட்சம் 18 வயது ஆகியிருக்க வேண்டும். 50 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பெண் குழந்தையும் குறைந்தபட்சம் ஒரு வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

கன்யாதான் திட்டத்தின் பாலிசி காலம் 13 முதல் 25 ஆண்டுகள். மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் பிரீமியம் செலுத்தும் ஆப்ஷன்களும் உண்டு. காப்பீடு செய்தபின் பெற்றோர் விபத்தில் மரணம் அடைந்தால் உடனடியாக ரூ.10 லட்சம் வழங்கப்படும். இயற்கை மரணம் ஏற்பட்டால், ரூ.5 லட்சம் உடனடியாக வழங்கப்படும்.

பாலிசி காலத்தின்போது தந்தை இறந்துவிட்டால், எஞ்சிய காலத்திற்கு குழந்தை பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை. இதுபோன்ற சந்தர்ப்பத்தில் பிரீமியம் தள்ளுபடி செய்யப்படும்.

தமிழக பெண்களின் பேங்க் அக்கவுண்டுக்கு வரும் ரூ.52,000! திராவிட மாடல் அரசின் ஜாக்பாட் திட்டங்கள்!

click me!