lic ipo gmp:எல்ஐசி ஐபிஓ: பாலிசிதாரர்கள் முதலீடு செய்யலாமா பங்குகள் வாங்கலாமா? வல்லுநர்கள் ஆலோசனை என்ன?

Published : May 03, 2022, 03:30 PM ISTUpdated : May 04, 2022, 09:08 AM IST
lic ipo gmp:எல்ஐசி ஐபிஓ:  பாலிசிதாரர்கள் முதலீடு செய்யலாமா பங்குகள் வாங்கலாமா?  வல்லுநர்கள் ஆலோசனை என்ன?

சுருக்கம்

lic ipo gmp :பொதுமுதலீட்டாளர்களுக்கான எல்ஐசி பங்குகள் விற்பனை(ஐபிஓ) இன்று (4ம்தேதி) தொடங்கி வரும் 9ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த பங்குவிற்பனையில் சில்லரை வர்த்தகர்கள், பாலிசிதாரர்கள், முதல்முறை முதலீட்டாளர்கள் பங்கேற்க வேண்டுமா என்பது குறித்து சந்தை வல்லுநர்கள் விளக்குகிறார்கள்.

பொதுமுதலீட்டாளர்களுக்கான எல்ஐசி பங்குகள் விற்பனை(ஐபிஓ) இன்று(4ம்தேதி) தொடங்கி வரும் 9ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த பங்குவிற்பனையில் சில்லரை வர்த்தகர்கள், பாலிசிதாரர்கள், முதல்முறை முதலீட்டாளர்கள் பங்கேற்க வேண்டுமா என்பது குறித்து சந்தை வல்லுநர்கள் விளக்குகிறார்கள்.

3.5% பங்குகள்

மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகலில் 3.5 சதவீதப் பங்குகளை மட்டுமே விற்பனை செய்ய இருக்கிறது. இதன் மூலம் ரூ.21 ஆயிரம் கோடி நிதி திரட்ட இருக்கிறது.

மே 2-ம் தேதி எல்ஐசி ஐபிஓ ஆங்கர் முதலீ்ட்டாளர்களுக்காகத் தொடங்கியது. மே 4ம் தேதி முதல் 9ம் தேதிவரை பொது முதலீட்டாளர்களுக்கும் ஐபிஓ வெளியிடப்படுகிறது. ஆங்கர் இன்வெஸ்டர்ஸ் மூலம் ரூ.5600 கோடி நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு பங்கு விற்பனையில் 10 சதவீதமும், ஊழியர்களுக்கு 5 சதவீதமும் ஒதுக்கப்படும். ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு செட் பங்கில் 15 பங்குகள் இருக்கும் இதேபோன்று 15 மடங்காக வாங்கவ வேண்டும்.

தள்ளுபடி 

எல்ஐசி பாலிசி வைத்திருக்கும் ஒவ்வொரு பாலிசிதாரரும் தலா ரூ.60 தள்ளுபடி பெறுவார்கள், ஊழியர்கள், சில்லரை முதலீட்டாளர்கள் குறைந்தபட்சமாக ரூ.45 தள்ளுபடி பெறுவார்கள். இந்த தள்ளுபடி போக பாலிசிதாரர்களுக்கு ஒரு பங்கின் விலை ரூ.889க்கு விற்கப்படும். சில்லரை முதலீட்டாளர்களுக்கு ரூ.45 தள்ளுபடி போக, ரூ904க்கு விற்கப்படும்.

எல்ஐசி ஐபிஓவில் பங்கேற்பது பாலிசிதாரர்கள் அவசியமா, சில்லரை முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவது சரியா, முதல்முறையாக முதலீடு செய்பவர்கள் இதில் ஈடுபடலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு வல்லுநர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

வளரும் துறை

ஆனந்த் ரதி பங்குவிற்பனை மற்றும் வாங்கும் தரகு மையத்தின் தலைவர், ஆய்வாளர் நரேந்திர சோலங்கி கூறுகையில் “ எல்ஐசி நிறுவனத்தில் 30 கோடி பாலிசிதார்கள் 15 லட்சம் ஏஜென்டுகள் உள்ள கவர்ச்சியான நிறுவனம். 2021ம் நிதியாண்டில் காப்பீடு துறையில் ப்ரீமியத்தில் 64 சதவீதம் எல்ஐசி தக்கவைத்துள்ளது. வாழ்நாள் காப்பீடு என்பது எதிர்காலத்தில் விரைவாக வளரும் துறையாக இருக்கிறது.

2020ம் ஆண்டில் மட்டும் ப்ரீமியம் மூலம் கிடைத்த வருவாய் மட்டும் 5.70 லட்சம் கோடி ரூபாயாகும். இதில் எல்ஐசி ப்ரீமியம் மட்டும்  ரூ.3.80 லட்சம் கோடியாகும். ஆதலால் எல்ஐசியில் ஒருவர் முதலீடு செய்வது என்பது, உலகின்3-வது மிகப்பெரிய வலிமையான காப்பீடு துறையில் முதலீடு செய்வதாகும். பாலிசிதாரராக மட்டும் இல்லாமல் முதலீட்டாளராகவும் இருக்கலாம்” எனத் தெரிவித்தார்

நீண்டகால முதலீடு

ஜிசிஎல் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரவி சிங்கால் கூறுகையில் “ பாலிசிதாரர் ஒவ்வொருவரும் எல்ஐசி ஐபிஓவுக்காக விண்ணப்பிக்கலாம். ஆனால் முதலீடு நீண்டகாலத்தில்தான் இருக்க வேண்டும் குறுகிய காலத்தில்  இருக்கக்கூடாது. பங்கு வாங்கும் அனைவருக்கும் நல்ல தள்ளுபடி தரப்படுகிறது, ஆதலால், குறைந்தபட்சம் ஓர் ஆண்டுக்கு பங்கு வாங்குபவர்கள் பங்குகளை விற்கக் கூடாது. நீண்டகால நோக்கில்தான் முதலீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

வாங்கலாம்

ஷேர் இந்தியா நிறுவனத்தின் தலைமை சந்தை ஆய்வாளர் ரவி சிங் கூறுகையில் “ எல்ஐசி ஐபிஓ விலை என்னைப் பொறுத்தவரை கவர்ச்சிகரமாக இல்லை, இதற்கு ஏற்றார்போல் நல்ல லாபம் கிடைக்குமா என்பதும் தெரியாது. ஆனால், ஐபிஓவில் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கலாம். குறுகியகால லாபம் பார்க்காமல் நீண்டகாலத்தில் முதலீட்டுக்கு உகந்தது” எனத் தெரிவித்தார்

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!
8வது ஊதியக் கமிஷன்: ரயில்வே ஊழியர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்