lic hfl Interest Rate: கடனுக்கான வட்டியை உயர்த்தியது எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ்(LIC HFL)

Published : Jun 21, 2022, 07:41 AM ISTUpdated : Jun 21, 2022, 10:37 AM IST
lic hfl Interest Rate: கடனுக்கான வட்டியை உயர்த்தியது எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ்(LIC HFL)

சுருக்கம்

LIC Home Loans Interest Rate Hike: lic hfl homeloan interest rate: எல்ஐசியின் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம்(எல்ஐசி ஹெச்எப்எல்) கடனுக்கான வட்டியை (LHPLR) 60 புள்ளிகள் உயர்த்தி நேற்று அறிவித்துள்ளது. வீட்டுக்கடன் பெஞ்ச்மார்க் அடிப்படையில் இணைக்கப்பட்டிருந்தால் இந்த வட்டிவீதஉயர்வு அமலாகும்.

எல்ஐசியின் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம்(எல்ஐசி ஹெச்எப்எல்) கடனுக்கான வட்டியை (LHPLR) 60 புள்ளிகள் உயர்த்தி நேற்று அறிவித்துள்ளது.

வீட்டுக்கடன் வட்டி பெஞ்ச்மார்க் அடிப்படையில் இணைக்கப்பட்டிருந்தால் இந்த வட்டிவீத உயர்வு அமலாகும்.

நாட்டில் பணவீக்கம் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அளவு வைத்திருக்கிறது.

 ஆனால், ஜனவரி மாதத்திலிருந்து பணவீக்கம் 6 சதவீதத்தை கடந்து வருகிறது, உச்ச கட்டமாக மார்ச் மாதம் 6.95 சதவீதத்தையும், ஏப்ரல் மாதம் 7.79 சதவீதத்தையும் எட்டியது. ஆனால், மே மாதத்தில் ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த  வட்டி வீதத்தில் 40 புள்ளிகளை உயர்த்தியது. இதனால் மே மாதத்தில் பணவீக்கம் 7.04 சதவீதமாகக் குறைந்தது.

இருப்பினும், ஏப்ரல் மாதத்திலும் பணவீக்கம் 7.49 சதவீதமாக உயர்ந்திருந்ததால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த 40 புள்ளிகளை வட்டியில் ரிசர்வ் வங்கி உயர்த்தியது. அதைத் தொடர்ந்து ஜூனில் நடந்த  நிதிக்கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ ரேட்டை 50 புள்ளிகள் உயர்த்தி ரிசர்வ் வங்கி நடவடிக்கைஎடுத்தது.

ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகளும் கடனுக்கான வட்டி வீதத்தையும், டெபாசிட்களுக்கான வட்டியையும் உயர்த்தி வருகின்றன. அந்த வகையில் எல்ஐசியின் ஹவுசிங் பைனான்ஸ்(எல்ஐசி ஹெச்எப்எல்) வீட்டுக்கடனுக்கான வட்டியை கடந்த மாதம் 20 புள்ளிகள் உயர்த்தியது.

இந்நிலையில் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நேற்று வீட்டுக்கடனுக்கான வட்டியை மேலும் 60 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இதையடுத்து, வீட்டுக்கடன் வட்டி 7.50 சதவீதத்திலிருந்து தொடங்குகிறது. 

ஏற்கெனவே ஹெச்டிஎப்சி வீட்டுக்கடன் வங்கியும் கடனுக்கான வட்டியை 50 புள்ளிகளை கடந்த 10ம் தேதி உயர்த்திவிட்டது. ஹெச்டிஎப்சி வீட்டுக்கடன் வட்டி 7.55 சதவீதத்திலிருந்து தொடங்குகிறது. இந்தியாபுல்ஸ் வீட்டுக்கடனுக்கான வட்டியையும் 50 புள்ளிகள் உயர்த்தியுள்ளது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக இந்தியா வளர 30 ஆண்டுகள் ஆகலாம்: ரகுராம் ராஜன்
IndiGo: 10,000 கார்கள், 9,500 ஹோட்டல் அறைகள், ரூ.827 கோடி ரீஃபண்ட்... மீண்டும் மீண்டு வந்த இண்டிகோ!