Lexus’ EV : 0-100 வெறும் 2 நொடிகள், 700 கி.மீ. ரேன்ஜ் - அதிரடி அம்சங்களுடன் உருவாகும் லெக்சஸ் EV சூப்பர் கார்

Nandhini Subramanian   | Asianet News
Published : Feb 24, 2022, 10:21 AM ISTUpdated : Feb 24, 2022, 10:23 AM IST
Lexus’ EV : 0-100 வெறும் 2 நொடிகள், 700 கி.மீ. ரேன்ஜ் - அதிரடி அம்சங்களுடன் உருவாகும் லெக்சஸ் EV சூப்பர் கார்

சுருக்கம்

லெக்சஸ் நிறுவனம் உருவாக்கி வரும் எலெக்ட்ரிக் சூப்பர் கார் மாடல் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

லெக்சஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் சூப்பர் கார் மாடலை உருவாக்கி வருகிறது. இந்த மாடல் 2030 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இதன் ப்ரோடோடைப் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. கம்பஷன் என்ஜின் கொண்ட மாடல்களுக்கு மாற்றாக லெக்சஸ் அறிமுகம் செய்யும் எலெக்ட்ரிக் கார்களில் இதுவும் ஒன்று ஆகும்.

முன்னதாக டொயோட்டா மற்றும் லெக்சஸ் நிறுவனங்கள் உருவாக்கி வரும் 15 புதிய எலெக்ட்ரிக் வாகன கான்செப்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது இந்த மாடலின் புகைப்படங்களை லெக்சஸ் வெளியிட்டு உள்ளது. 2030 முதல் லெக்சஸ் நிறுவனம் அனைத்து பிரிவுகளிலும் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. 

சீனா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் 2030 முதல் எலெக்ட்ரிக் கார் மாடல்களை மட்டுமே விற்பனை செய்ய லெக்சஸ் முடிவு செய்துள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் கார் - பேட்டரி EV ஸ்போர்ட்ஸ் கார் என அழைக்கப்படுகிறது. இந்த காரை உருவாக்குவதன் மூலம் கிடைக்கும் அனுபவத்தை கொண்டு எதிர்கால லெக்சஸ் எலெக்ட்ரிக் வாகன மாடல்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.

புதிய எலெக்ட்ரிக் கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 2 நொடிகளுக்குள் எட்டிவிட வேண்டும் என லெக்சஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும் இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 700  கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த சூப்பர் கார் கான்செப்ட் மாடலில் சாலிட்-ஸ்டேட் பேட்டரிகள் வழங்கப்பட இருக்கின்றன. இதே பேட்டரிகள் ஹைப்ரிட் கார் மாடல்களிலும் வழங்கப்பட இருக்கின்றன.

இதன் மூலம் புதிய தொழில்நுட்பத்தை போதுமான அளவு சோதனை செய்ய முடியும். கான்செப்ட் மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் லெக்சஸ் மாடலை போன்று காட்சியளிக்கிறது. லெக்சஸ் நிறுவனம் தனது முதல் பி-ஸ்போக் EV மாடலை வரும் வாரங்களில் அறிமுகம் செய்து 2022 இறுதிக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!