கிசான் விகாஸ் பத்திரத்தில் குறைந்தபட்சம் ரூ. 1,000 முதலீடு செய்யவேண்டும். அதற்கு மேலும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். 115 மாதங்களில் முதலீட்டுத் தொகை இரட்டிப்பாகும்.
நல்ல வட்டியைப் பெறக்கூடிய நீண்ட கால முதலீட்டுத் திட்டத்தை தேடுபவர்களுக்கு கிசான் விகாஸ் பத்திரம் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை 115 மாதங்களில் இரட்டிப்பாகும். இது தபால் துறையின் சிறந்த சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
கிசான் விகாஸ் பத்திரத்தில் 18 வயதைக் கடந்த அனைவரும் தனியாகவோ கூட்டாகவே கணக்கைத் தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் தங்கள் பெயரில் இந்தக் கணக்கையும் ஆரம்பிக்கலாம். மைனர் அல்லது மனநிலை சரியில்லாத நபரின் பெற்றோர் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
கிசான் விகாஸ் பத்திர கணக்கைத் திறக்கும்போது, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் வயதுச் சான்றிதழ் நகல்கள் ஆகியவற்றுடன் இத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
எல்லாருக்கும் மாதம்தோறும் ரூ.5000 கிடைக்கும்! போஸ்ட் ஆபீஸ் வழங்கும் மாத வருவாய் திட்டம்!
கிசான் விகாஸ் பத்திரத்தில் குறைந்தபட்சம் ரூ. 1,000 முதலீடு செய்யவேண்டும். அதற்கு மேல் 100 இன் மடங்குகளில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். எந்த தபால் நிலையத்திலும் இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு திறக்கலாம்.
முதலீடு செய்யப்படும் தொகை 115 மாதங்களில் அதாவது ஒன்பதரை ஆண்டுகளில் இரட்டிப்பாகும். இதில் 7.5% வட்டி வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 115 மாதங்களுக்கு பிறகு ரூ.2 லட்சம் கிடைக்கும். ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால், ரூ.20 லட்சமாக மாறும்.
பங்குச் சந்தையின் ஏற்ற தாழ்வுகளால் கிசான் விகாஸ் பத்திரத் திட்டம் பாதிக்கப்டாது. இத்திட்டத்திற்கு அரசாங்க உத்திரவாதம் உள்ளது. முதலீடு பாதுகாப்பாக இருக்குமா என்று கவலைப்படத் தேவையில்லை.
115 மாதங்களுக்குப் பின் முதிர்வுத் தொகை கிடைக்கும். அதுவரை உங்கள் கணக்கில் தொடர்ந்த்து வட்டிப் பணம் கிடைத்துக் கொண்டிருக்கும். கிசான் விகாஸ் பத்திரம் மூலம் கடன் வாய்ப்பும் வசதியும் கிடைக்கும்.