இந்த தபால் நிலைய திட்டத்தில் முதலீடு செய்தால் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கலாம்..

Published : Jul 28, 2023, 01:00 PM ISTUpdated : Jul 28, 2023, 01:15 PM IST
இந்த தபால் நிலைய திட்டத்தில் முதலீடு செய்தால் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கலாம்..

சுருக்கம்

. தங்கள் பணத்தை எதிர்காலத்தில் இரட்டிப்பாக்க வேண்டும் என்று தேடும் மக்களுக்கு இந்த திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும்.

நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு பல தபால் அலுவலக திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தபால் அலுவலக திட்டங்கள் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படுவதால், பாதுகாப்பான முதலீடு, உத்தரவாதமான வருவாய் ஆகியவை உறுதி செய்யப்படுகிறது. அந்த வகையில் உங்களுக்கு நல்ல வருமானத்தை அளிக்கக்கூடிய திட்டங்களில் ஒன்று கிசான் விகாஸ் பத்ரா திட்டம். இந்தத் திட்டம் 1988-ம் ஆண்டு இந்தியா தபால்துறையால் அறிமுகம் செய்யப்பட்டது. தங்கள் பணத்தை எதிர்காலத்தில் இரட்டிப்பாக்க வேண்டும் என்று தேடும் மக்களுக்கு இந்த திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும்.

தபால் அலுவலக சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டுக்கும் மத்திய அரசு திருத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி, இந்த திட்டத்தின் வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியது. இந்தத் திட்டத்தின் வருமானம் இப்போது ஆண்டுக்கு 7.5% என்ற விகிதத்தில் இருக்கும். இந்தத் திட்டத்தின் காலம் 115 மாதங்கள் அல்லது 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள் ஆகும். 

பணத்தை எப்படி இரட்டிப்பாக்குவது?

இந்தத் திட்டத்தில் ஒருவர் குறைந்தபட்சமாக ரூ. 1000 முதலீடு செய்யலாம், அதிகபட்சத் தொகைக்கு வரம்பு இல்லை. நீங்கள் ஒரு மொத்த தொகையை முதலீடு செய்யத் தேர்வுசெய்தால், 115 மாதங்களின் முடிவில் அதை இரட்டிப்பாகப் பெறுவீர்கள். அதாவது ஒருவர் 4 லட்சத்தை முதலீடு செய்தால், 115 மாதங்களில் 8 லட்சமாக திருப்பித் தரப்படும். பணமோசடி வழக்குகளைத் தடுக்க ரூ.50,000 அல்லது அதற்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு பான் கார்டு வழங்க வேண்டும் என்று அரசு கட்டாயமாக்கி உள்ளது. 10 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட முதலீட்டுக்கு, சம்பள சீட்டு (Payslip), வங்கி அறிக்கைகள் மற்றும் ஐடிஆர் ஆவணங்கள் போன்ற வருமானச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். முதலில் விவசாயிகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் தற்போது அனைவருக்குமான திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் இந்த திட்டத்தை பெறலாம்.

என்ன தகுதி?

விண்ணப்பதாரர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், மேலும் வயது வந்தவர் ஒரு மைனர் அல்லது மனநிலை சரியில்லாதவர் சார்பாக விண்ணப்பிக்க தகுதியுடையவர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது. தொடக்கத்தில், இந்தத் திட்டத்தில் பணம் இரட்டிப்பாக்க 120 மாதங்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

IIT, IIM கல்வி இல்லை.. ரூ.12,000 கோடி Turnover! இந்தியாவின் பணக்கார கோழி விவசாயிகளின் வெற்றிக்கதை..

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு