itr filing date: itr rules:TDS அல்லது TCS ரூ.25 ஆயிரத்துக்கு மேல் வாங்குறீங்களா? மத்திய அரசு கிடுக்கிப்பிடி

Published : Jun 15, 2022, 03:21 PM IST
itr filing date: itr rules:TDS அல்லது TCS ரூ.25 ஆயிரத்துக்கு மேல் வாங்குறீங்களா?  மத்திய அரசு  கிடுக்கிப்பிடி

சுருக்கம்

itr filing date: itr rules: ஒருவர் ஒரு நிதியாண்டில் ரூ.25 ஆயிரம் அல்லது அதற்கு மேல் டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் தாக்கல் பெற்றால், அவர் கண்டிப்பாக வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அ ரசு தெரிவித்துள்ளது.

ஒருவர் ஒரு நிதியாண்டில் ரூ.25 ஆயிரம் அல்லது அதற்கு மேல் டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் தாக்கல் பெற்றால், அவர் கண்டிப்பாக வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அ ரசு தெரிவித்துள்ளது.

அதுவே, மூத்த குடிமக்கள் டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் மூலம் ரூ.50ஆயிரம் அல்லது அதற்கு மேல் பெற்றால், அவர்களும் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும்என்று வருமானவரித்துறையின் புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை நடப்பு நிதியாண்டு ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 

மத்திய அரசு வருமானவரி செலுத்தும் வளையத்துக்குள் இன்னும் அதிகமான நபர்களை கொண்டுவர முயல்கிறது. அந்தவகையில் சமீபத்தில் மத்திய நிதிஅமைச்சகம் ஒரு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: 
வருமானம் ஈட்டும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் வருமானவரி செலுத்தும் வளையத்துக்குள் வந்துள்லனர். அவர்கள் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்து வருகிறார்கள். புதிய மாற்றங்களுடன் இன்னும் அதிகமான நபர்களை வருமானவரி வளையத்துக்குள் கொண்டுவர இருக்கிறோம்.

அதுமட்டுமல்லாமல் ஒரு தனிநபர் ஒர் நிதியாண்டுக்குள் வங்கிக்கணக்கில் ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேல் டெபாசிட்செய்தால்அவரும் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும். 

2019, நிதிச்சட்டம் 7வது அத்தியாயம் பிரிவு 139ன் கீழ் தனிநபர்கள் வருமானவரி விலக்கு அளிக்கப்பட்ட தொகைக்கும் கீழ் ஊதியம பெற்றாலும் அவரும் கண்டிப்பாக வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில் அந்த குறிப்பிட்ட நபர் ஓர் நிதியாண்டில் வங்கிக்கணக்கில் ஒரு கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தால், வெளிநாடு சுற்றுலா சென்று ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக செலவிட்டால், ஆண்டுக்கு மின்சாரக் கட்டணம் ரூ.ஒரு லட்சத்துக்கும் அதிகமாக வந்தால் அந்த நபர் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும்.

வருமானவரி ஆலோசகர்கள் கூறுகையில் “ தொழில்ரீதியான கட்டணத்துக்கான ரசீதுகள் ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக இருந்தாலும் அவர்களும் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும். அவர்கள் வருமானவரிச்சட்டம் 44ஏஏன்படி கணக்குகளை பராமரிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!