
அடுத்த தலைமுறைக்கான தொலைத்தொடர்பு சேவையான 5ஜி அலைக்கற்றையின் அடுத்த 20 ஆண்டுகளுக்கான ஏலம் மற்றும் வர்த்தகரீதியான அறிமுகம் ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இதன்படி 5ஜி அலைக்கற்றை தனியார் நிறுவனங்களுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்படும்.
4ஜி நெட்வொர்க் சேவையில் தற்போது கிடைக்கும் இணையதளத்தின் வேகம், கொள்திறன் ஆகியவற்றைவிட 10 மடங்கு அதிகமாக 5ஜி அலைக்கற்றையில் இருக்கும்.
இதுகுறி்த்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் “ அடுத்த 20 ஆண்டுகளுக்கான 72,097.85 மெகாஹெட்ஸ் மதிப்புள்ள அலைக்கற்றையின் ஏலம் 2022, ஜூலை மாத இறுதியில் நடக்க உள்ளது. பல்வேறுவிதமான பரவல்களில் அலைகற்றை ஏலம் விடப்படும். அதாவது 600மெகாஹெட்ஸ், 700மெகாஹெட்ஸ், 800மெகாகஹெட்ஸ், 900மெகாஹெட்ஸ், 1800 மெகாஹெட்ஸ், 2100 மெகாஹெட்ஸ், 2300 மெகாஹெட்ஸ் ஆகியவையும் நடுத்தரமானதில் 3300 மெகாஹெட்ஸ், மற்றும் உயர்அலைவரிசை 25ஜிகாஹெட்ஸ் அலைகற்றையும் ஏலம் விடப்படும்.
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் வெல்லும் நிறுவனங்கள் பணத்தை மொத்தமாகச் செலுத்தாமல், 20 சரிபங்கு தவணையில் ஒவ்வொரு காலாண்டர் ஆண்டு தொடக்கத்திலும் செலுத்த வேண்டும். பணப்புழக்கத் தேவைகளை கணிசமாக எளிதாக்கி வர்த்தகம் செய்வதற்கான செலவையும் இந்த முறை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவணை ஏதும் இல்லாதபட்சத்தில் ஏலம் எடுத்த நிறுவனங்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அலைக்கற்றையை திரும்ப ஒப்படைக்கவும் வாய்ப்பு வழங்கப்படும்.
5ஜி சேவைகளை வெளியிடும்போது போதுமான பேக்ஹால் அலைக்கற்றை போதுமான அளவு இருப்பது அவசியம். பேக்ஹால் தேவையை நிறைவு செய்ய ஈ-பேண்டில் தலா 250 மெகா ஹெர்ட்ஸ் கொண்ட 2 தளங்களை தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு தற்காலிகமாக ஒதுக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள 13, 15, 18 மற்றும் 21 ஜிகாஹெட்ஸ் அலைவரிசைகளில் ஏற்கெனவே இருக்கும் பழமையான மைக்ரோவேவ் பேக்ஹால் தளங்கள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆனால், 5ஜிஅலைக்கற்றைக்கான விலை குறித்து மத்திய அரசின் செய்திக்குறிப்பில் ஏதும் இல்லை.
கடந்த மாதம் டிஜிட்டல் தொடர்பு ஆணையம், 5ஜி ஏர்வேஸுக்கான ஏலத்துக்கு ஒப்புதல் வழங்கியது. அடிப்படை விலையில் 90 சததவீதம் குறைக்க செல்போன் சேவை நிறுவனங்கள் பேரம் பேசின. ஆனால், 36 சதவீதம் மட்டுமே விலைக்குறைப்பு செய்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.