PM Modi's Recruitment: பிரதமர் மோடியின் ‘10 லட்சம்பேருக்கு வேலை’ : நாட்டின் வேலையின்மை சிக்கலைத் தீர்க்குமா?

By Pothy RajFirst Published Jun 15, 2022, 11:37 AM IST
Highlights

 PM Modi announces recruitment of 10 lakh people in 1.5 years: அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு அரசாங்கத்தில் வேலை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி நேற்று அறிவித்துள்ளது, நாட்டில் நிலவும் வேலையின்மை சிக்கலைத் தீர்க்க உதவுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு அரசாங்கத்தில் வேலை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி நேற்று அறிவித்துள்ளது, நாட்டில் நிலவும் வேலையின்மை சிக்கலைத் தீர்க்க உதவுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வேலையின்மை குறைகிறது

பணமதிப்பிழப்பு, கொரோனா பெருந்தொற்று பரவல், அதைத்தொடர்ந்து லாக்டவுன்களால் நாட்டின் பொருளாதாரம் நசிந்துவிட்டது. கொரோனா பரவல் முடிந்தபின்புதான் இப்போதுதான் மெல்லமெல்ல பொருளாதாரம் மீட்சிக்கு வருகிறது. 
கடந்த மே மாதம் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றோர் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்துள்ளது. இதனால் வேலையின்மை அளவு ஏப்ரலில் 7.83 சதவீதம் இருந்த நிலையில் மே மாதத்தில் 7.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.

சந்தேகம்

ஆனால், பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில் “ மத்திய அரசின் இ்ந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் வைத்திருக்கும் அளவு கோல், எந்த மதிப்பிட்டின்படி ஆய்வு செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளாமல் உண்மையான நிலவரத்துக்கும், கருத்துக்களையும் கூறுவது கடினம்” எனத் தெரிவித்துள்ளனர்.

காலிப்பணியிடம்

சமீபத்தில் இ்ந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் நாட்டில் 45 கோடி மக்கள்  வேலைசெய்ய அரசு வகுத்துள்ள சட்டப்பூர்வ வயதில் இருக்கிறார்கள் எனத் தெரிவி்த்தது. ஏறக்குறைய அமெரி்க்கா மற்றும் ரஷ்யா மக்கள் தொகைக்கு இணையானதாகும்.
இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று விடுத்த அறிவிப்பு ஒன்றில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நாட்டில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் மத்திய அரசு அளித்த தகவலில், “ 2020 மார்ச் 1ம் தேதி நிலவரப்படி நாட்டில் 8.72 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. 2019ம்ஆண்டு மார்ச் நிலவரப்படி 9.10 லட்சம் காலியிடங்களும், 2018ம் ஆண்டுமார்ச் நிலவரப்படி 6.83 லட்சம் காலியிடங்களும் உள்ளது” எனத் தெரிவித்தது.

வேலைவாய்ப்பு

2018-19 மற்றும் 2020-21ம் ஆண்டில் எஸ்எஸ்இ, யுபிஎஸ்சி, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ஆகியவை மூலம் 2.65,468 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் எண்ணிக்கை

மத்திய அரசு பணியில் இருப்போர் எண்ணிக்கை மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் குறைவாகவே இருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு நிலரப்படி சீனாவில் பொதுத்துறையில் 3.90 கோடிமக்கள் பணியாற்றுகிறார்கள். அது சீனாவில் வேலைபார்க்கும் பிரிவினரில் 5 சதவீதம் பேர் அரசுதுறையில் பணியாற்றுகிறார்கள். 

2021ம் ஆண்டில் பிரிட்டனில் 17சதவீதம் பேரும், ஐரோப்பியயூனியனில் 18 சதவீதம் பேரும், 2020ம் ஆண்டு நிலவரப்படி அமெரிக்காவில் 6.90 சதவீதம் பேரும் அரசுப்பணியில் உள்ளனர். இந்த விவரங்கள் அனைத்தும் மாநில அரசு வேலைவாய்ப்பு இல்லை. 

மத்திய அரசு மற்றும் ஆயுதப்படை ஊழியர்களை விட மாநில வேலைவாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று வைத்துக்கொண்டால், இந்தியாவின் மொத்த மத்திய அரசில் பணியாற்றுவோர் 2 கோடிக்கு மேல் இருப்பார்கள். அந்தவகையில் ஒட்டுமொத்த பணியாற்றுவோர் 2.2 சதவீதம் பேர் மட்டுமே மத்திய அரசில் பணியாற்றுகிறார்கள்.

இலக்கு தேவை

2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மெக்கின்ஸி குளோபல்இன்ஸ்டியூட் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் 2023 மற்றும் 2030ம் ஆண்டுகளுக்கு இடையே இந்தியா வேளாண்மை அல்லாத வேலைவாய்ப்புகளில் 9 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கி புதியவர்களுக்கு வேலைஅளிக்க வேண்டும். கூடுதலாக 3கோடி பேரை வேளாண் துறையிலிருந்து வேளாண்மை அல்லாத துறைக்கு மாறுவார்கள். 

2023ம் ஆண்டிலிருந்து இந்தியா ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 1.20 கோடி வேலைவாய்ப்புகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதாவது 2023ம் நிதியாண்டில் 1.20 கோடி வேலைவாய்பபுகளை வழங்கினால், மறு ஆண்டு 2.40 கோடி பேர் என்பதாகும். 
இதற்கிடையே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ராணுவத்துக்கு வீரர்களைத் தேர்வு செய்வதில்  புதிய சீர்திருத்தங்களைச் செய்து, அக்னிபாதைத்திட்டதுக்கு வழிவகுத்தது.

புதிய திட்டம் பயனளிக்குமா

தரைப்படை, கப்பற்படை, விமானப்படைக்கு வீரர்கள் 17.5 முதல் 21 வயதுவரை வீரர்களைச் சேர்க்கலாம். இந்த அக்னீவர்ஸ், தேசத்துக்காக 4 ஆண்டுகள் சேவை செய்ய வேண்டும். இந்த திட்டத்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும், பல்வேறு துறைகள் மூலம் புதிய திறமை உருவாகும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்த திட்டத்தில் 4 ஆண்டுகள் முடிந்தபின் பெரும்பாலான வீரர்கள் வெளியேறுவார்கள். ஆண்டுக்கு 45 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படும்போது, அதில் 25 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தமாக்கப்படுவார்கள். மற்றொரு அறிக்கையின்படி மத்திய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியி்ட்ட மாடல் என்பது, நாட்டில் நிரந்த ராணுவ சேவையின் அளவைக் குறைக்கிறது. இருப்பினும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஏதாவது தாக்கத்தை உருவாக்க வேண்டும்

விவாதப்பொருள்

நகர்ப்புறங்களில் மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் இன்னும் விவாதப்பொருளாகவே இருந்து வருகிறது. பிரதமரின் ஆலோசகர்கள் சமீபத்தில் அளித்த அறிக்கையில், “ மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் நகர்ப்புரங்களில் பங்கேற்பு மற்றும் கிராமப்புறங்களில் பங்கேற்பு அளவு விரிவடைந்து வருகிறது”எனத் தெரிவி்த்தது

அதுமட்டுமல்லாமல் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத் திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற மத்திய அரசு இலக்கு வைத்துள்ளதுதனியார் துறையில் கடந்த 8 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு சாதகமான வளர்ச்சியுடன் நகர்ந்து வருகிறது. செப்டம்பர் காலாண்டில் வேலைவாய்ப்பு உச்சமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோட்டாவைக் கடிப்பது போன்றதுதான்

நகர்ப்புறங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்துவது குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் ஏற்படுத்தும். ஆனால், அரசின் புள்ளிவிவரங்கள் படி கிராமப்புறங்களில் பயன்படுத்துவதைவிட நகர்ப்புறங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. வேலைவாய்ப்பை மறைமுகமாகத் தூண்டவும், மக்கள் கையில் பணப்புழக்கத்தை அதிகப்படுத்தவும், பொருளாதார சுழற்ச்சியை வேகப்படுத்தவும் மகாத்மா ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் சிறந்தது என்று பல பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

வேலைவாயப்பு உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் திட்டமாகும். இந்தத் திட்டம் காங்கிரஸ் கொண்டுவந்த திட்டம் என்பதால், புறக்கணிக்காமல், வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது என்ற சிந்தனையுடன், அணுக வேண்டும். தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும்கூட நாட்டின் நலன் கருதி மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத்  திட்டத்தை கடினமான மனதுடன் பிரதமர் மோடி செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். 


 

click me!