itr filing date: வருமான வரி விலக்கும் வேணும், பணமும் சேமிக்கணும் எப்படி? டாப்-10 திட்டங்கள் தெரிஞ்சுக்குங்க?

By Pothy RajFirst Published Jun 11, 2022, 10:32 AM IST
Highlights

itr filing date: ITR filing :வருமான வரி செலுத்துவோருக்கு வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்வது முக்கியமானது. ஐடிஆர் தாக்கல்செய்யும்போது, வருமானவரியைச் சேமிக்கும் சேமிப்புத்திட்டங்களையும் கணக்கில் காட்டுவோம். நாம் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை அற்புதமான சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து நல்ல லாபத்தையும் பெறலாம், வருமானவரி விலக்கும் பெறலாம்.

வருமான வரி செலுத்துவோருக்கு வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்வது முக்கியமானது. ஐடிஆர் தாக்கல்செய்யும்போது, வருமானவரியைச் சேமிக்கும் சேமிப்புத்திட்டங்களையும் கணக்கில் காட்டுவோம். நாம் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை அற்புதமான சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து நல்ல லாபத்தையும் பெறலாம், வருமானவரி விலக்கும் பெறலாம்.

பிபிஎப்(PPF)

மத்திய அரசின் திட்டமான பொது வைப்புநிதியில் முதலீடு செய்யலாம். ஓய்வுகாலத்துக்குப்பின் கிடைக்கும் பலனுக்காக உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தில்ல முதலீட செய்தால் 80சி பிரிவில் ரூ.1.50 லட்சம் வரை வரிக்கழிவு கிடைக்கும். பிபிஎப் திட்டம் 15 ஆண்டுகள் திட்டமாகும். பிபிஎப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்தபின்பும் 5 ஆண்டுகளுக்கு தொடரலாம். 

என்பிஎஸ்(NPS)

தேசிய ஓய்வூதியத் திட்டமும் மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டமாகும். ஓய்வுகாலத்துக்குப்பின் நிம்மதியான வருமானத்தைத் தருவதற்காக அரசால் உருவாக்கப்பட்ட சேமிப்புத்திட்டம். தனியார் மற்றும் அரசு ஊழியர்களும் இதில் சேரலாம். முதல்நிலை-1, இரண்டாம்நிலை ஆகிய இரு பிரிவகளில் இந்தத் திட்டம் வருகிறது. முதல்நிலை திட்டம் 80சிசிடி(1),90சிசிடி(1பி) பிரிவில் வரும். இரண்டாம்நிலைதிட்டம் தன்னார்வத் திட்டம். முதல்நிலைத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.500 வரையிலும் 2-ம்நிலையில் ரூ.1000வரையிலும் முதலீடுச செய்யலாம்

காப்பீடுத் திட்டங்கள்

வருமானவரி செலுத்துவதை மிச்சப்படுத்துவதில் பிரதமானது காப்பீடுதிட்டங்கள். வாழ்நாள் காப்பீடு மூலம் 80சி பிரிவில் ரூ.1.50 லட்சம் வரை விலக்கு பெறலாம். யுனிட் லிங்டு இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீடு செய்தால் ரூ.2.50 லட்சம் வரை வரிக்கழிவு பெறலாம்.

இஎல்எஸ்எஸ்(ELSS)

பங்குகளோடு தொடர்புடைய சேமிப்புத்திட்டமாகும். பரஸ்பர நிதித்திட்டத்துடன் தொடர்புடைய இந்தத்திட்டத்தின் காலம் 3ஆண்டுகள். இந்ததிட்டத்தில் நம்முடைய முதலீடு பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும்.இதற்கு 80சி பிரிவில் வரிக்கழிவு உண்டு.

வரிசேமிப்பு வைப்பு நிதி 

வருமானவரியைச் சேமிக்கவே தனியாக வைப்புத் திட்டங்கள் உள்ளன. அதில் 80சி பிரிவில் ரூ.1.50 லட்சம் வரை வரிக்கழிவு பெறலாம்.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புதிட்டம்

60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிலையான வருமானம் வரக்கூடிய வகையில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத்திட்டம் உள்ளன. இதில் 7.4 சதவீதம் வட்டி கிடைக்கும், இதில் முதிர்வுத்தொகை வரும்முன்பே பணத்தை எடுக்கும் வசதியும் இருக்கிறது

தேசிய சேமிப்புப் பத்திரங்கள்

மத்திய அரசால் வழங்கப்படுவது தேசிய சேமிப்புப்பத்திரங்கள். இதன் காலம் 5 ஆண்டுகளாகும். முதர்வுக் காலத்தில் அனைத்துப்பணத்தையும் முதலீட்டாளர் பெற முடியும், மறுபடியும் முதலீடும் செய்யமுடியும். இதற்கு 80சி பிரிவில் ரூ.1.50லட்சம் வரை வருமானவரி விலக்கு பெறலாம்.

சுகன்யா சம்ரிதி திட்டம்

பெண் குழந்தைகளுக்காக அரசு உருவாக்கியத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் ரூ.1.50 லட்சம் வரை வருமானவரி விலக்கு பெறலாம். 

சுகாதாரக் காப்பீடு

மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தாலும் வருமானவரி விலக்கு பெறலாம். ஒருவர் ரூ.25 ஆயிரம் வரை தனக்கோ, மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ மருத்துவக் காப்பீடு செய்திருந்தால், 80டி பிரிவில் வருமானவரி தள்ளுபடி பெறலாம். வீட்டில் இருக்கும் முதியோருக்கு மருத்துவக் காப்பீடு செய்திருந்தால் ரூ.50ஆயிரம்வரை வருமானவரியில் விலக்கு பெறலாம்.

வீட்டுக் கடன்

வீடு கட்டுவதற்கு கடன் பெறும்போது, வருமானவரி செலுத்துவதில் ரூ.1.50 லட்சம் வரை கடனை திருப்பிச் செலுத்தும் அசல் தொகையில் 80சி பிரிவில்விலக்கு பெறலாம். இருவர் சேர்ந்து வீட்டுக்கடன் பெற்றிருந்தாலும், இருவரும் வரிவிலக்கிற்கு விண்ணப்பிக்கலாம். இதில் பிரிவு 24ன்கீழ் ரூ.2 லட்சம்வரை வரிவிக்கு கோரலாம். வீட்டுக்கடன் ரூ.35 லட்சத்துக்கு குறைவாக இருந்தாலோ அல்லது சொத்து மதிப்பு ரூ.50 லட்சதுக்கு குறைவாக இருந்தாலோ கூடுதலாக ரூ.50ஆயிரம் வரிவிலக்கு கோரலாம்.

click me!