
ஆதார் கார்டு எடுத்து 10 ஆண்டுகள் ஆகியவோர் தங்கள் விவரங்களை புதுப்பிக்கக் கோரி யுஐடிஏஐ(UIDAI)அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன் ஆதார் கார்டு எடுத்தவர்கள், தங்களின் அடையாள அட்டை, முகவரி குறித்த ஆதாரம் ஆகியவற்றோடு ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இன்னும் இணைக்கவில்லையா? தெரிந்து கொள்ளுங்கள்
யுஐடிஏஐ வெளியிட்ட அறிவிப்பில், “ கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் அனைவருக்கும், தனிநபர்களுக்கும் அடையாள அட்டையாக மாறிவிட்டது. மத்திய அரசின் பல்வேறு சலுகைகளை, திட்டங்களைப் பெறுவதற்கும் ஆதார் கார்டு அவசியமாகும். இந்தச் சேவையைப் பெறுவதற்காக மக்கள் அனைவரும் ஆதாரில் உள்ள தங்கள் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும். அதாவது ஆதார் அட்டைதாரர்கள் செல்போன் எண்ணை மாற்றியிருந்தாலோ அல்லது முகவரியை மாற்றியிருந்தாலோ அதை புதுப்பிக்கலாம்.
ஆதார் கார்டு எடுத்து 10 ஆண்டுகள் முடிந்தவர்கள், ஆதார் விவரங்களை புதுப்பிக்காதவர்கள், விரைவில் புதுப்பிக்க வேண்டும். இந்த விவரங்களை ஆன்-லைன் மூலமோ அல்லது ஆப்லைனிலோ புதுப்பிக்கலம். மை ஆதார் போர்டல் மூலம் விவரங்களைப் புதுப்பிக்கலாம். இல்லாவிட்டால் வீட்டின்இருகே இருக்கும் ஆதார் பதிவு மையம் அல்லது பொதுச்சேவை மையத்தில் புதுப்பிக்கலாம். அஞ்சல ஊழியரிடம் ரூ.50 செலு்தினால் ஆதார் விவரங்கள் வீட்டிற்கே வந்து புதுப்பிக்கப்படும் ” எனத் தெரிவித்துள்ளது.
அது மட்டுமல்லாமல் நாடுமுழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இனிமேல் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழுடன் சேர்ந்து, ஆதார் அட்டையும் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் அடுத்த சில மாதங்களில் அமலாகும்.
ஆதார் கார்டு மூலம் வங்கி சேமிப்புக் கணக்கில் பேலன்ஸ் பார்க்க முடியுமா! தெரிந்து கொள்ளுங்கள்
அந்த குழந்தைக்கு 5 வயது ஆனவுடன் பயோமெட்ரிக் பதிவும், கைவிரல் ரேகையும் பதிவு செய்ய வேண்டும். 15 வயது நிரம்பியவுடன் பயோமெட்ரிக் விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.