irdai :வாழ்நாள் காப்பீடு நிறுவனங்களும், மருத்துவக் காப்பீடு வழங்க விரைவில் அனுமதி

Published : Jun 21, 2022, 12:25 PM IST
irdai :வாழ்நாள் காப்பீடு நிறுவனங்களும், மருத்துவக் காப்பீடு வழங்க விரைவில் அனுமதி

சுருக்கம்

irdai:வாழ்நாள் காப்பீடு வழங்கும் நிறுவனங்களே, மருத்துவக் காப்பீடு வழங்கவும் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம்(ஐஆர்டிஏஐ) அனுமதி வழங்கலாம் என ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

வாழ்நாள் காப்பீடு வழங்கும் நிறுவனங்களே, மருத்துவக் காப்பீடு வழங்கவும் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம்(ஐஆர்டிஏஐ) அனுமதி வழங்கலாம் என ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

அவ்வாறு அனுமதி வழங்கினால், மருத்துவக் காப்பீட்டுக்கான ப்ரீமியம் தொகை குறையும், குறைந்த செலவில் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு கிடைக்கும்

ஆங்கில நாளேடு வெளியிட்ட செய்தியில் “ இந்திய காப்பீடு ஆணையம் சார்பில் நடந்தஆலோசனைக் கூட்டத்தில் வாழ்நாள் காப்பீடு வழங்கும் நிறுவனங்களே, மருத்துவக் காப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வாழ்நாள் காப்பீடு அளவு மக்களிடையே மிகக் குறைந்த அளவில்தான் இருக்கிறது. 2021-22ம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில்கூட, 2020ம் ஆண்டில் இந்தியாவில் காப்பீடு பெற்றவர்கள் 3.2 சதவீதம்தான் என்றும், 2019ம் ஆண்டில் 2.82 சதவீதமாக இருந்தநிலையில் சற்று அதிகரி்த்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. 

அதிலும் வாழ்நாள் காப்பீடு அல்லாத பிற காப்பீடுகளான மருத்துவக் காப்பீடு, மோட்டார் வாகனக்காப்பீடு, தீத்தடுப்பு காப்பீடு, தொழிற்சாலைகளுக்கான காப்பீடு ஆகியவை வெறும் ஒரு சதவீதம் அளவில்தான் இருக்கிறது. உலகளவில் இந்தியாவில் காப்பீடு என்பது 4.1 சதவீதமாக இருக்கிறது.

ஆதலால், வாழ்நாள் காப்பீடு வழங்கும் காப்பீடு நிறுவனங்களே மருத்துவக் காப்பீடுகளை வழங்கவும் அல்லது பிறநிறுவனங்களின் காப்பீடுகளை விற்கவும், அல்லது வாழ்நாள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு இணைந்த காப்பீடாக விற்கவும் அனுமதி அளி்க்கப்படலாம்” எனத் தெரிவித்துள்ளது.

தற்போது அடிப்படை மருத்துவக் காப்பீடு என்பது ரூ.2 லட்சமாக இருக்கிறது. இதற்கு ப்ரீமியம் தொகையாக எந்தவிதமான நோயும் இல்லாத 18முதல் 50வயதுள்ள ஒருவர் ரூ.5ஆயிரம் முதல் ரூ7ஆயிரம் வரை ப்ரீமியம் தொகை செலுத்தலாம்.  ஒருவேளை வாழ்நாள் காப்பீடு நிறுவனங்களை மருத்துவக் காப்பீடு வழங்க இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதித்தால், மருத்துவக் காப்பீடு ப்ரிமியம் இன்னும் 10 சதவீதம் வரை குறையும் எனத் தெரிகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்