irctc latest news: ராம பக்தர்களுக்காக 18 நாள் டூர்: இஎம்ஐ மூலம் டிக்கெட்: irctc அசத்தல் அறிமுகம்

By Pothy RajFirst Published May 26, 2022, 4:42 PM IST
Highlights

irctc latest news: ராமர் பிறந்த இடம், வாழ்ந்த இடம் உள்ளிட்டவற்றை அடக்கி ராம பக்தர்களுக்காக 18 நாட்கள் கொண்ட சுற்றுலாவை ரயில்வேயின் ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது. 

ராமர் பிறந்த இடம், வாழ்ந்த இடம் என நம்பப்படும் இடங்களை உள்ளிட்டவற்றை அடக்கி ராம பக்தர்களுக்காக 18 நாட்கள் கொண்ட சுற்றுலாவை ரயில்வேயின் ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது. 

இந்த 18 நாட்கள் சுற்றுலாவில் அயோத்தியா, நேபாளில் ஜானக்பூர், சீதாமார்ஹி, வாரணாசி, நாசிக், ராமேஷ்வரம் உள்ளிட்ட ஏராளமான இடங்களை கொண்டதாக “ பாரத் கவுரவ்” சுற்றுலா வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐஆர்சிடியின் இந்த 8ஆயிரம் கி.மீ தொலைவு கொண்ட சுற்றுலா 18 நாட்கள் கொண்டதாகவும் இருக்கும். டெல்லியிலிருந்து பயணம் புறப்படுவதாக ஐஆர்சிடிசி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. 

இஎம்ஐ டிக்கெட்
இந்த பாரத் கவுரவ் சுற்றுலாத் திட்டத்தில் பயணிகளைக் கவர்வதற்காக இஎம்ஐ மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்தும் வசதியை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது. இந்த 18 நாட்கள் கொண்ட சுற்றுலாவுக்கான கட்டணம் தலா ஒரு பயணிக்கு ரூ.62,370 வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தில் 3-ம் நிலை குளிர்சாதன வசதி பெட்டியில் பயணம், இரவுநேரத்தில் ஹோட்டலில் தங்கும் செலவு, 3வேளை உணவுகள், சுற்றுலா இடங்களைப் பார்வையிடுதலுக்கானக் கட்டணம், காப்பீடு, சுற்றுலா வழிகாட்டி என அனைத்துச் செலவுகளும் அடங்கும். இந்த சுற்றுலாவுக்கான டிக்கெட் கட்டணத்தை மாதத் தவணை மூலம் பயணிகள் செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

ஐஆர்சிடிசி செய்தித்தொடர்பாளர் கூறுகையில் “ முதல்முறையாக இயக்கப்படும் பாரத் கவுரவ் ரயில்,சேவை ஜூன் 21ம் தேதி புறப்படுகிறது. 3-ம்வகுப்பு ஏ.சி. பெட்டியில் பயணத்தில் 600 பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். முதலில் இந்த ரயில்அயோத்தியாச சென்றடையும். அங்கு ராமர் பிறந்தஇடம், ஹனுமான் கோயில், நந்திராகிராமி பாரத் மந்திர் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அதன்பின், பக்ஸரில் மகரிஷி விஸ்வாமித்தர், ராம் ரேகா காட், கங்கையில் புனித நீராடுதல் போன்றவை இருக்கும்

நேபாளம்

அதன்பின் நோபாளத்தில் ஜானக்பூர், ஜெயாநகருக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். ஜானக்பூரில் இரவு தங்கிவிட்டு, அங்கிருந்து ராமர் ஜானகி கோயில், சீதாபிறந்த இடம் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு, வாரணாசி புறப்பாடு.
வாரணாசியில் உள்ள அனைத்து கோயில்களும் பார்வையிட்டு தரிசனம் முடித்தபின், சாலை மார்க்கமாக சித்ரகூட், பிரயாக்ராஜ் சென்று அங்கு இரவு தங்குதல். அங்கிருந்து, நாசிக் சென்று திரியம்பரேஸ்வரர் கோயில், பஞ்சவடி தரிசனம்செய்து தங்குதல். நாசிக்கிலிருந்து புறப்பட்டு கிஷ்கிந்தா, ஹம்பி சென்றுதங்குதல்.

ஹனுமன் பிறந்த இடமான ஆஞ்சனேயாத்ரி மலை உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களை பார்வையிட்டு தரிசனம் செய்தபின் ராமேஸ்வரம் புறப்பாடு. ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோயில், தனுஷ்கோடி சென்றுவிட்டு ராமேஸ்வரத்தில்தங்குதல்.

ராமேஸ்வரம்

அங்கிருந்து ரயில் மார்க்கமாக காஞ்சிபுரம், சிவ காஞ்சி, விஷ்னு காஞ்சி, காமாட்சி கோயில் போன்றவையும், தெலங்கானாவில் பத்ராச்சலம் பார்வையி்ட்டு மீண்டும் இடம் சேருதல். இந்த ரயிலில் பயணிகளின் உடமைகளைக் கொண்டு செல்ல தனியாக பெட்டி இணைக்கப்படும். பயணிகளுக்கு உடனுக்குடன் சமைக்கப்பட்ட உணவுகள், தரமான குடிநீர், தகவல்தொழில்நுட்பவசதிகளுடன், கண்காணிப்பு கேமிராவுடன் கூடிய பெட்டிகள் இணைக்கப்படும்” எனத் தெரிவித்தார்

click me!