
இன்போசிஸ் தலைவர் பதவியை மோஹித் ஜோஷி ராஜினாமா செய்து இருப்பது நிறுவனத்தில் பெரிய அளவில் வெற்றிடத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இவர் அதிக ஆண்டுகள் இந்த நிறுவனத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். இந்த நிறுவனத்தின் நிதிச் சேவைகள், சுகாதாரம்/ லைப் சயின்ஸ் ஆகியவற்றை கவனித்து வந்தார். இவரை பணியில் தக்க வைக்க இவரிடம் நிறுவனம் பேசியதாகவும், ஆனால், ஜோஷி பெரிய பொறுப்பை எதிர்பார்த்தாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
இவர் டெக் மகேந்திரா நிறுவனத்தின் சிஇஓ-வாக பொறுப்பேற்க இருக்கிறார் எந்த தகவலும் வெளியாகி இருக்கிறது. அந்த நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு அதாவது வரும் டிசம்பர் 20, 2023-ல் இருந்து டிசம்பர் 19, 2028 வரை பொறுப்பு வகிப்பார் என்று தெரிய வந்துள்ளது.
Breaking: 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட ரஜினிகாந்த் - யோகி பாபு!
மோஹித் ஜோஷி ராஜினாமாவை அடுத்து, பங்குச் சந்தைக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், வரும் ஜூன் 9 வரை ஜோஷி பதவியில் இருப்பார் என்றும், அதுவரை அவர் விடுப்பில் இருப்பார் என்றும் இன்போசிஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தில் கடந்த 2000வது ஆண்டில் ஜோஷி பணிக்கு சேர்ந்தார். இதற்கு முன்பு ஐரோப்பாவில் நிதிச்சேவை தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். 2007ஆம் ஆண்டில், மெக்சிகோவில் இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து லத்தீன் அமெரிக்காவில் இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனத்தை துவக்குவதற்கும் காரணமாக இருந்துள்ளார். அவிவா நிறுவனத்திலும் இயக்குனராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்து ராஜினாமா செய்திருந்த ரவி குமார் சமீபத்தில்தான் காக்னிசன்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக பொறுப்பேற்றார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.