வருமான வரித்துறை ரூ.6,329 கோடி தரணும்! ஆர்டர்களைக் காட்டும் இன்போசிஸ் நிறுவனம்!

By SG Balan  |  First Published Mar 31, 2024, 7:07 PM IST

2007-08 முதல் 2015-16, 2017-18 மற்றும் 2018-19 ஆண்டுகளுக்கான மதிப்பீட்டில் இருந்து திரும்பப் பெறக்கூடிய தொகை குறித்து வருமான வரித்துறையிடம் இருந்து ஆர்டர்களைப் பெற்றுள்ளதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் வருமான வரித்துறையிடமிருந்து ரூ.6,329 கோடி திரும்பக் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. பல்வேறு மதிப்பீட்டு உத்தரவுகளை மேற்கோள் காட்டி, ரூ.2,763 கோடி வரி தேவை குறித்தும் பங்குச் சந்தைகளுக்குத் தெரிவித்தது.

2007-08 முதல் 2015-16, 2017-18 மற்றும் 2018-19 ஆண்டுகளுக்கான மதிப்பீட்டில் இருந்து திரும்பப் பெறக்கூடிய தொகை குறித்து வருமான வரித்துறையிடம் இருந்து ஆர்டர்களைப் பெற்றுள்ளதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Latest Videos

"இன்ஃபோசிஸ் நிறுவனம் ரூ.6,329 கோடியை (வட்டியுடன் சேர்த்து) திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்கிறது. மார்ச் 31, 2024 இல் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைகளில் இந்த ஆர்டர்களின் தாக்கங்களை நிறுவனம் மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளது" என்று இன்ஃபோசிஸ் கூறியுள்ளது.

கச்சத்தீவு பிரச்சினை கிளப்பிய பாஜக பூஜ்ஜியம் வாங்கப்போவது உறுதி: ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட இன்ஃபோசிஸ் நிறுவனம் ஐடி சேவை ஒப்பந்தங்களுக்கான சந்தையில் முன்னிலை வகிக்கிறது. டிசிஎஸ் மற்றும் விப்ரோ மற்றும் பிற நிறுவனங்களுடன் போட்டியிடுகிறது. நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டு மற்றும் 2024 நிதி ஆண்டுக்கான முழுமையான முடிவுகளை ஏப்ரல் 18ஆம் தேதி அறிவிக்க இன்ஃபோசிஸ் திட்டமிடப்பட்டுள்ளது.

2022-23ஆம் ஆண்டிற்கான வரிக் கோரிக்கையுடன் வட்டியுடன் சேர்த்து ரூ..2,763 கோடியும், மதிப்பீட்டு ஆண்டு 2011-12க்கு ரூ.4 கோடி வரிக் கோரிக்கையுடன் வட்டியும் சேர்த்து ஆர்டரைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இன்ஃபோசிஸ் தனது துணை நிறுவனங்களுக்கான ரூ.277 கோடியைப் பெறுவதற்கும் ஆர்டர்களைப் பெற்றுள்ளது. இவற்றில் முறையே 2021-22 மற்றும் 2018-19 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான ஆர்டர்களும் அடங்கும்.

ஒரு துணை நிறுவனம் வருமான வரி சட்டத்தின் பிரிவு 254 இன் கீழ் 2007-08 மற்றும் 2008-09 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கும், பிரிவு 154 இன் கீழ் 2016-17 மதிப்பீட்டு ஆண்டுக்கும் பணத்தைத் திருப்பப் பெறுவதற்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளது. இந்த ஆர்டர்களின்படி இன்ஃபோசிஸ் திருப்பப் பெறவுள்ள தொகை ரூ.14 கோடி ஆகும்.

இந்திய ராணுவத்தின் ஆகாஷ் ஏவுகணை அமைப்பின் சோதனை வெற்றி! மற்றொரு மைல்கல்லை எட்டிய DRDO!

click me!