inflation india: அதிகரிக்கும் பணவீக்கத்தால் மேலும் சிக்கல்: ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு முக்கிய வேண்டுகோள்

By Pothy RajFirst Published May 10, 2022, 11:33 AM IST
Highlights

inflation india: நாட்டில் பணவீக்கத்தால் அடுத்தடுத்து சிக்கல் அதிகரித்து வருவதையடுத்து, கடன் பத்திரங்களுக்கான வட்டி வருவாயைக் குறைக்க வேண்டும் அல்லது, வெளிச்சந்தை நடவடிக்கை(ஓபன் மார்க்கெட் ஆப்ரேஷன்) நடத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாட்டில் பணவீக்கத்தால் அடுத்தடுத்து சிக்கல் அதிகரித்து வருவதையடுத்து, கடன் பத்திரங்களுக்கான வட்டி வருவாயைக் குறைக்க வேண்டும் அல்லது, வெளிச்சந்தை நடவடிக்கை(ஓபன் மார்க்கெட் ஆப்ரேஷன்) நடத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஓபன் மார்க்கெட் ஆப்ரேஷன்

வெளிச்சந்தை நடவடிக்கையால் கடந்த 2019ம் ஆண்டு நல்ல பலன் கிடைத்தது என்பதால், அதை மீண்டும் செயல்படுத்த வேண்டும். சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று முதலீட்டை எடுத்துவருகிறார்கள் என்று மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

ரிசர்வ் வங்கி வெளியிட்ட 10 ஆண்டு கடன் பத்திரங்களுக்கு வட்டி 7.46 சதவீதம் கிடைத்து வருகிறது. குறுகிய கால கடன் பத்திரங்களை நீண்டகாலக் கடன் பத்திரங்களாக மாற்றுங்கள் அல்லது ஓபன் மார்க்கெட் ஆப்ரேஷன் நடத்துங்கள் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட்டி வீதம் உயர்வு

நாட்டில் பணவீக்கம் மார்ச் மாதம் 7 சதவீதத்தை எட்டிவிட்டதையடுத்து, ரிசர்வ் வங்கி கடந்த வாரம் திடீரென வட்டி வீதத்தை 40 புள்ளிகள் உயர்த்தியது. இதையடுத்து 4.40 சதவீதமாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஏப்ரல் மாதம்  பணவீக்கம் மேலும அதிகரிக்கும் என்பதால், ரிசர்வ் வங்கி அடுத்தடுத்து வட்டியை உயர்த்தவே வாய்ப்புள்ளது.

ரூபாய் மதிப்பு சரிவு

இதனால், அந்நிய முதலீட்டாளர்கள் சந்தையிலிருந்து பங்குகளை விற்றும், கடன் பத்திரங்களை விற்றும் முதலீட்டை திரும்பப் பெற்று வருகிறார்கள். இதனால் நேற்று வரலாற்றில் இல்லாதவகையில் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு ரூ.77.42 ஆகக் குறைந்தது. 
இதுபோன்ற நேரத்தில் ரிசர்வ் வங்கி தலையிட்டு, தன்னிடம் இருக்கும் டாலர்களை சந்தையில் வெளியிட்டு ரூபாயின் மதிப்பு சரியாமல் தடுக்கும். ஆனால், நேற்று இதுபோன்று ரிசர்வ் வங்கி தலையிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தலையிடவில்லை.

செலாவணி வெளியேற்றம்

அதேநேரம் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப்பெற்று வெளியேறுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  கடந்த ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து இதுவரை 6.97 கோடி டாலர்கள் முதலீட்டை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர். 2022ம் ஆண்டில் இதுவரை 118 கோடி டாலர்களை திரும்பப் பெற்றுள்ளனர். 

இதனால் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 269.50 கோடி குறைந்து, 5,977.28 கோடி டாலராகக் குறைந்துவிட்டது. தொடர்ந்து 8-வது வாரமாக அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து வருவது கவலைக்குரியது. ஓர் ஆண்டில் 60000 கோடி டாலருக்கும் குறைவாக முதல்முறையாக அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது.

வெளியேறுகிறேன்

அந்நிய முதலீட்டாளர் ஒருவர் கூறுகையில் “ நான் இந்தியாவிலிருந்து முழுமையாக வெளியேறுகிறேன். 20 கோடி டாலர் அரசு பங்குப்பத்திரங்களையும்7 கோடி பங்குளையும் விற்றுவிட்டேன். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டியைஉயர்த்தும். டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு சரியும் போது ரிசர்வ் வங்கி தலையீடு போதுமானதாக இல்லை, அந்நியச் செலாவணி கையிருப்பும் குறைந்து வருகிறது.

ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தி, டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு ரூ.80 ஆகும்போது மீண்டும் வருவேன்”எனத் தெரிவித்தார்.
பணவீக்கத்தால் பல்வேறு பிரச்சினைகள் அடுத்தடுத்துவருவதால் ரிசர்வ் வங்கியிடம் மத்திய அ ரசு முக்கிய வேண்டுகோளை வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

ரிசர்வ் வங்கிக்கு வேண்டுகோள்

அது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “ அரசு கடன் பத்திரங்களை திரும்பப் பெற்று பணத்தை வழங்குங்கள். அல்லது ஓபன் மார்க்கெட் ஆப்ரேஷன் நடத்துங்கள் எனக் கேட்டுள்ளது. ஆதலால் ரிசர்வ் வங்கி தனது நடவடிக்கையை மாற்றலாம். அந்நிய முதலீட்டாளர்களிடம் இருக்கும் குறுகியகால கடன், பங்கு பத்திரங்களை நீண்டகால முதலீடாகமாற்றலாம்.  அல்லது அடுத்த இரு வாரங்களில் கடன்பத்திரங்களை திரும்பப் பெற்று முதலீட்டை திருப்பித் தரலாம். இது தொடர்பாக மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் ஆலோசனைநடத்தியிருப்தால், அடுத்தவாரம் இதில் ரிசர்வ் வங்கி முடிவு எடுக்கும். 

சந்தையிலிருந்து பணத்தை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கியின் வட்டிவீத உயர்வு கொள்கை மேலும் சிக்கலை அதிகரிக்கும் என்று அரசு கூறியுள்ளது” எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

click me!