இந்திய பங்கு சந்தை உயர்வுக்கு காரணம் என்ன.......?

First Published Dec 27, 2016, 12:59 PM IST
Highlights


இந்திய பங்கு சந்தை உயர்வுக்கு காரணம் என்ன.......?

வாரத்தின்  இரண்டாவது வர்த்தக  தினமான  இன்று, பங்குச்சந்தை   உயர்வுடன் தொடங்கியுள்ளது.

மிக விரைவில் , தாக்கல் செய்யப்பட உள்ள, பொது பட்ஜெட் அறிக்கையில்  வருமான  வரி விதிப்பு தொடர்பாக, பல  சலுகைகள்   பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம்  என   செய்திகள் வெளியாகி உள்ளது. நிதியமைச்சர்  அருண்  ஜெட்லியும் , சலுகை  குறித்து அறிக்கை  தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனால்,  பொதுவாகவே,   முதலீடு   செய்ய  , முதலீட்டாளர்கள் ஆர்வம்  காட்டி வருகின்றனர். இதன்  விளைவாக ,  பல  நிறுவங்களின்  பங்குகள்  உயர்வை கண்டுள்ளன.

குறிப்பாக, சிப்லா, லுப்பின், சன் ஃபார்மா  உள்ளிட்ட பல   நிறுவன  பங்குகள்  உயரந்துள்ளது

இதன் விளைவாக, வர்த்தகத்தின் இடையே, மும்பை  பங்குச்சந்தை  குறியீடு  சென்செக்ஸ் 119 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை   குறியீடு  எண்  நிப்டி 40  புள்ளிகள்  உயர்ந்தும்  வர்த்தகமானது.

 

 

click me!