நிஃப்டி 24,000 புள்ளிகளைக் கடந்து அசுர வேகத்தில் இந்திய பங்குச் சந்தை!!

Published : Apr 21, 2025, 01:17 PM ISTUpdated : Apr 21, 2025, 01:49 PM IST
நிஃப்டி 24,000 புள்ளிகளைக் கடந்து அசுர வேகத்தில் இந்திய பங்குச் சந்தை!!

சுருக்கம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ் 1045 புள்ளிகள் உயர்ந்து 79,607.11 ஆகவும், நிஃப்டி 328.85 புள்ளிகள் உயர்ந்து 24,182.85 ஆகவும் இருந்தது. வங்கி பங்குகள் உயர்வு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை போன்றவை இதற்குக் காரணமாக அறியப்படுகிறது.

Indian Share market today: மும்பை பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டன. காளைகள் மீண்டும் பங்குச் சந்தையில் துள்ளிக் குதித்து விளையாடுகின்றன. 

இந்திய பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸை 1045 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.  நிஃப்டி 24,000 புள்ளிகளைத் தாண்டியது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பங்குகளை இன்று முதலீட்டாளர்கள் முதலீடு செய்தனர். 

Sensex, Nifty surged Today:

பிஎஸ்இ என்று கூறப்படும் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 1045 புள்ளிகள் அதிகரித்து 79,607.11 ஆகவும், நிஃப்டி 50, 328.85 புள்ளிகள் அதிகரித்து 24,182.85 ஆகவும் இருந்தது. ஜனவரி ஆறாம் தேதிக்குப் பின்னர் தற்போது ஐந்தாவது செஷனில் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை உயர்ந்து வருகிறது. இந்திய பங்குச் சந்தையின் மீது  முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்திருப்பதை இது காட்டுகிறது. வங்கிகளின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இதற்குக் காரணம் இந்தியா, அமெரிக்கா இடையே நீடிக்கும் உறவு மற்றும் வர்த்தக ஒப்பந்த பேச்சுகளாகும். அமெரிக்க வரி விதிப்பு கொள்கைகளில் நிலைத்தன்மை இல்லாத நிலையில், கடந்த வாரம் உள்ளூர் பங்குகளில்1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்யப்பட்டது.

11% க்கும் மேலாக உயர்ந்த பங்குகள்; முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி - என்னென்ன பங்குகள்?

Bank Shares ICICI, HDFC Surges today:

இன்றைய பங்குச் சந்தையில் எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி போன்றவற்றின் பங்குகளின் மதிப்பு உயர்ந்து காணப்பட்டது.  வங்கி பங்குகளின் மதிப்பு சென்செக்சில் 1.3 சதவீதமும், நிஃப்டியில் 0.9 சதவீதமும் அதிகரித்து காணப்பட்டது. பிஎஸ்இ சென்செக்ஸில் இன்டஸ்இந்த் வங்கி 5.49% உயர்ந்து, முதலிடத்தில் இருந்தது. அதைத் தொடர்ந்து டெக் மஹிந்திரா 3.98% உயர்ந்தது. ஆக்சிஸ் வங்கியும் 3.54% உயர்வுடன் வலுவான வேகத்தைக் காட்டியது. அதே நேரத்தில் பஜாஜ் ஃபின்சர்வ் 3.23% உயர்ந்தது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) 3.06% உயர்ந்து, முதல் ஐந்து லாபம் ஈட்டிய வங்கிகளில் இடம் பெற்றது. 

அடுத்த 10 வருடத்துக்கு லாபத்தை வாரி வழங்கும் டாப் 10 பங்குகள் இவைதான்!

Nifty Metal, oil Shares:

மற்ற துறைகளும் நல்ல லாபத்தைக் கண்டன. நிஃப்டி எண்ணெய் & எரிவாயு 1.93%, நிஃப்டி மெட்டல் 1.79% மற்றும் நிஃப்டி ஐடி 1.72% உயர்ந்தன. நிதி சேவைகள் மற்றும் ஆட்டோமொபைல் பங்குகளும் சிறப்பாக செயல்பட்டன. நிஃப்டி நிதி சேவைகள் மற்றும் நிஃப்டி ஆட்டோ இரண்டும் 1.4% க்கும் அதிகமாக உயர்ந்தன. சென்செக்ஸில் அதிக லாபம் ஈட்டியவர்களில் டெக் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, இன்போசிஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் இண்டஸ்இந்த் வங்கி ஆகியவை அடங்கும். மறுபுறம், அதானி போர்ட்ஸ், ஐடிசி, பாரதி ஏர்டெல், டைட்டன், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் சன் பார்மா ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் பின்தங்கின.

டாலரின் மதிப்பு குறைவு, இந்தியா மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை:

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வரும்  நிலையில் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் டெல்லி வந்திருப்பது பாசிடிவ்வாக பார்க்கப்படுகிறது. உலக பங்குச் சந்தை பெரிய அளவில் பாதித்து இருக்கும்  நிலையில், இந்திய பங்குச் சந்தை சுமார் 6% அதிகரித்துள்ளது. டாலரின் மதிப்பும் குறைந்த காரணத்தில் இந்தியாவில் முதலீடு அதிகரித்து வருகிறது. இன்றைய பங்குச் சந்தை உச்சத்திற்கு காரணமே, ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ பங்குகள் தான்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் டெலிகாம், ஏர்லைன்ஸ், ஓட்டல்கள், ஆட்டோ, ரியல் எஸ்டேட், சிமென்ட், சுகாதாரம் தொடர்பான பங்குகளின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஐடி பங்குகள் அமெரிக்க சந்தையை சார்ந்து இருப்பதால் தொடர்ந்து இறங்குமுகமாக இருக்கிறது. 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Investment: முதியோர் பணத்தை ஏப்பம் விடும் குட்டி குட்டி தவறுகள்.! 7 விஷயங்களை தவிர்த்தால் சேமிப்பு கரையாது.!
Business: வருங்காலத்துல இந்தியாவில் பவர்கட்டே இருக்காதாம்.! ஏன் தெரியுமா.?