
Indian Stock Market today: இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கிறது. ஏப்ரல் 17, வியாழக்கிழமை, பங்குச் சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகியவை வலுவான லாபத்தைக் கண்டன.
சென்செக்ஸ் 1,508.91 புள்ளிகள் அல்லது 1.96 சதவீதம் உயர்ந்து 78,553.20 புள்ளிகளிலும், நிஃப்டி 50 414.45 புள்ளிகள் அல்லது 1.77 சதவீதம் உயர்ந்து 23,851.65 புள்ளிகளிலும் நிறைவடைந்தது. மொத்தம் 2,340 பங்குகள் இன்று உயர்ந்து காணப்பட்டன. 1,468 பங்குகள் சரிந்தன. 149 பங்குகள் மாறாமல் இருந்தன.
வங்கி மற்றும் எண்ணெய் & எரிவாயு பங்குகளில் ஏற்பட்ட வலுவான லாபங்களால், பெஞ்ச்மார்க் குறியீடுகள் வியாழக்கிழமை தொடர்ந்து நான்காவது அமர்வாக உச்சத்தை தொட்டது. இந்த ஏற்றம் ஒட்டுமொத்த சந்தை மூலதனத்தில் மிகப்பெரிய அளவில் ரூ.4.96 லட்சம் கோடியைச் சேர்த்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கை மிரட்டலுக்குப் பின்னர் இந்திய சந்தை வேகமாக உயர்ந்து வருகிறது.
இந்த பங்கை இப்போதே வாங்குங்க.. லாபம் நிச்சயம்.. நிபுணர்கள் அட்வைஸ்!
நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களில் ஜொமாடோ (எடர்னல்), ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், பாரதி ஏர்டெல் மற்றும் சன் பார்மா ஆகியவை அடங்கும். மறுபுறம், விப்ரோ, டெக் மஹிந்திரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் கோல் இந்தியா ஆகியவை சரிந்து காணப்பட்டன.
Nifty, Sensex வங்கிகள் பங்கு உயர்வு:
காலாண்டு வருவாய்க்கு முன்னதாக, HDFC வங்கி மற்றும் ICICI வங்கியின் வலுவான செயல்திறன் காரணமாக, வங்கி நிஃப்டி 2 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து காணப்பட்டது. இந்த ஏற்றம் மற்ற துறைகளிலும் காணப்பட்டது. ஆட்டோ, பார்மா, எண்ணெய் & எரிவாயு மற்றும் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் 1 சதவீதத்திற்கும் அதிகமான லாபத்தை பதிவு செய்தன. நிஃப்டி எஃப்எம்சிஜி, மெட்டல் மற்றும் ரியாலிட்டி குறியீடுகளும் உயர்ந்து, ஒவ்வொன்றும் சுமார் 0.7 சதவீதம் அதிகரித்தன. நிஃப்டியில் ஐடி மட்டுமே சரிந்து இருந்தது. விப்ரோ பங்குகள் இது 0.35 சதவீதம் சரிந்திருந்தது.
Indian Stock Market Today: இந்திய பங்குச் சந்தையில் கரடியை முட்டித் தள்ளும் காளை; காரணங்கள் என்ன?
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான சாதகமான வர்த்தக பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்திய பங்குச் சந்தை உயர்ந்து வருகிறது. முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 90 நாட்கள் பரஸ்பர கட்டணத்தை நிறுத்தி வைத்துள்ளார். 90 நாட்களுக்குப் பின்னர் கூடுதல் வரி விலக்கு அளிக்கலாம் என்று கூறப்படுகிறது. விரைவில் நிலைமை சீராகி அமெரிக்காவுடன் இந்தியா சாதகமான வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட வாய்ப்புள்ளது. அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் நிஃப்டி 24,000–25,000 புள்ளிகளை எட்டும் என்று கணிக்கப்படுகிறது.
இந்திய பங்குச் சந்தைக்கு எதிர்காலம் வசந்த காலம்தான்:
கடந்த இரண்டு வாரங்களாக உலகளாவிய பங்குச் சந்தை நிச்சயமற்று காணப்பட்டது. இதற்கிடையில் தற்போது இந்திய பங்குச் சந்தை உயர்ந்து வருகிறது. அமெரிக்க-சீன வர்த்தகப் போர், இந்தியாவை உலகளாவிய உற்பத்திக்கு ஒரு கவர்ச்சிகரமான மாற்றாக பார்க்கப்படுவதுதான் இதற்கு காரணம். அமெரிக்காவுடன் தற்காலிக வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி இந்தியா செல்கிறது.
இந்தியா மீது முன்பு விதிக்கப்பட்ட 26 சதவீத வரியுடன், 2030 ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தில் 500 பில்லியன் டாலர்களை இலக்காகக் கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இறக்குமதி வரிகள் அதிகரிப்பதால் மின்னணுவியல் மற்றும் ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் போன்ற துறைகள் குறிப்பிடத்தக்க பின்னடைவுகளை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.