
அமெரிக்கா தேர்தல் இந்திய பங்கு சந்தையில் எதிரொலிகிறதா....?
கடந்த வாரம் , அமெரிக்க தேர்தல் கருத்து கணிப்பின் படி, ட்ரம்ப் முன்னிலை வகித்தார் என்ற தகவல் வெளியான உடன் , முதலீட்டாளர்களின் முதலீடு குறைந்து, வர்த்தகமானது.
இந்நிலையில், முதலீடு செய்வதற்கு , ஹிலாரி கிளிண்டனுடைய ஆட்சி சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது, ஹிலாரிக்கே ஆதரவு அதிகமாக இருப்பதால், முதலீட்டாளர்கள் , அதிக முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அதன்படி, நேற்றும் இந்திய பங்கு வர்த்தகம் உயர்ந்து முடிவுற்றது.
அதே சமயத்தில், வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான இன்று, மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 132 புள்ளிகள் உயர்ந்து, 27,591 புள்ளிகளுடன் முடிவுற்றது.
தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 46 புள்ளிகள் உயர்ந்து 8543 புள்ளிகளில் முடிவுற்றது.
லாபம் கண்ட நிறுவனங்கள் :
Tata motors, tata mtr dvr, GAIL, BHEL, TECHM உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்துடன் முடிவுற்றது.
இழப்பை சந்தித்த நிறுவனங்கள் :
SUNPHARMA, CIPLA,AUROPHARMA,TATA POWER, HCL TECH உள்ளிட்ட நிறுவன பங்குகள் இழப்பை சந்தித்தன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.