
என்டிடிவி மீதான தடை ஒத்திவைப்பு .....!! 5-ம் தேதி வரை காத்திருக்கும் உச்ச நீதிமன்றம்..!!
விதி மீறல்கள் தொடர்பாக, பிரபல என்டிடிவி இந்தியா நிறுவனத்திற்கு நாளை ஒரு நாள் மட்டும் , அதாவது 24 மணி நேரம், ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தற்போது, மத்திய அரசே இது தொடர்பாக , முடிவை மறு பரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளது . அதன்படி, இது குறித்த விசாரணையை நடத்த டிசம்பர் 5-ம் தேதி வரை காத்திருக்க உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தடை விதிப்புக்கு எதிராக , என்.டி.டிவி நிறுவமனம் உச்சநீதிமன்றத்தை நேற்று அணுகிய அதே வேளையில், அரசு தரப்பிலிருந்தே, என்.டி.டிவி மீதான தடையை தள்ளிவைதுள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், என்.டி.டிவி நிறுவனத்திற்கு தங்கள் கருத்துக்களை முன்வைக்க ஒரு வாய்ப்பினை வழங்கி உள்ளார் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு...!!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.