
“நெட்பேங்கிங்”..! இனி டெபிட்கார்ட், கிரெடிட்கார்ட் இல்லாமலேயே பர்சேஸ் பண்ணலாம்..!!!
முதன் முதலாக இந்தியாவில், கூகிள் மிக அருமையான ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது, “நெட் பேங்கிங்” என்ற புது முறையை , அறிமுகம் செய்துள்ளது கூகிள்...!
பொதுவாகவே, நாம் பர்ச்சேஸ் செய்யும் போது, அதில் கேட்கும் அனைத்து விவரங்களையும் { பெயர், கார்டு நம்பர், எக்ஸ்பைரி டேட்....} கொடுத்த பின்பே, நம்மால் பேமண்ட் செய்ய முடியும் .... இதற்காக , நாம் எப்பொழுதும், நம் கையில் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் வைத்திருக்க வேண்டும்.
ஆனால் , இப்பொழுது எந்த கார்டும் இல்லாமலேயே, “ நெட் பேங்கிங் “ மூலம் பர்சேஸ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், கூகிளின் “Net banking “ என்ற இந்த ஆப்ஷன், இப்பொழுது இதனை மிகவும் எளிதாக்குகிறது.
அதன்படி, இந்தியாவில் மட்டும், மொத்தம் 38 வங்கிகளுடன் இணைந்து , இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது கூகிள்......
அதன்படி , Axis Bank, Citibank, HDFC Bank, ICICI Bank, State Bank of India, Bank of India உள்ளிட்ட வங்கிகள் இந்த திட்டத்தில் தற்போது இணைந்துள்ளன...
“கூகிள் நவ்” என்ற இந்த சொல், தற்போது இந்தியாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்துகிறது எனலாம்...
பொறுத்திருந்து தான் சொல்ல முடியும் எந்த அளவுக்கு “கூகிள் நவ் ” பயன்பட போகிறது என்பதை ....... !!!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.