indian railways: ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் அரசுக்கு இல்லை: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

By Pothy RajFirst Published Mar 25, 2022, 10:48 AM IST
Highlights

indian railways : ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை. எனக்கு முன்பிருந்த அமைச்சர்களும் இதே வாக்குறுதியை அளித்துள்ளார்கள் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
 

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை. எனக்கு முன்பிருந்த அமைச்சர்களும் இதே வாக்குறுதியை அளித்துள்ளார்கள் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் நேற்று நடந்த விவாதத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:

முதலீடு தேவை

சமூகக் கடமை நிறைந்த ஒருநிறுவனம்தான் ரயில்வே துறை. இந்த துறையின் மிகப்பெரிய சவால் முதலீடுதான். கடந்த 2017ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டை, பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்பின், இந்தத் துறை வேகமெடுத்துள்ளது.2014ம் ஆண்டுவரை ரயில்வேதுறையின் முதலீடு என்பது ரூ.45ஆயிரம் கோடியாகத்தான் இருந்தது. ஆனால், 2017ம் ஆண்டில் இரு இரு மடங்காக உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.2 லட்சத்து 45ஆயிரத்து 800 கோடியாக இருக்கிறது.

ரயில்வே துறையைப் பொறுத்தவரை எந்த மாநிலத்தையும் பாகுபாட்டுடன் நடத்தவில்லை. ரயில்வே துறையை திறமையாக நடத்த மாநில அரசுகள், மத்திய அ ரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் ரயில்வே பணிகள் பாரபட்சமின்றி நடக்கும், அதற்கு மாநிலங்கள் நிலம் கையகப்படுத்துதலை தடையின்றி செய்ய வேண்டும்.

மின்வழித்தடம்

கடந்த2014ம் ஆண்டுக்கு முன்பு, சராசரியாக ரயில்வே இருப்புப் பாதை விஸ்தரிப்பு ஆண்டுக்கு1,520 கி.மீ. தொலைவாகத்தான் இருந்தது. ஆனால், தற்போது ஆண்டுக்கு 3ஆயிரம் கி.மீ இருக்கிறதுரயில்வே துறையில் இருக்கும் டீசல் எஞ்சின்களை அகற்றிவிட்டு அனைத்திலும் மின்சார எஞ்சின்களைப்பொறுத்த பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த 2009 முதல் 2014ம் ஆண்டுவரை ஆண்டுக்கு 608 கி.மீ ரயில்வே வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டன. ஆனால்,2021ம் ஆண்டுவரை ஆண்டுக்கு 3,440 கி.மீ மின்மயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை 50ஆயிரம் கி.மீ தொலைவுக்கு இருப்புப்பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

வந்தேபாரத் ரயில்

2024ம் ஆண்டுக்குள் 75 வந்தேபாரத் ரயில்களை மக்கள் வசதிக்காக வெளியிட ரயில்வே திட்டமிட்டுள்ளது. நம்முடைய பொறியாளர்கள் சிந்தனையில் உருவானதுதான் வந்தேபாரத் ரயில். இதுவரை இரு ரயில்கள் இயக்கப்பட்டு, 2 லட்சம் கி.மீ தொலைவைக் கடந்துள்ளன. இந்த இரு ரயில்கள் மூலம் ஏராளமான விஷயங்களைத் தெரிந்து கொண்டதால், அடுத்தாக மேம்படுத்தப்பட்ட ரயில்கள் வரும்.

புல்லட் ரயில்

அகமதாபாத் மற்றும் மும்பை இடையிலான புல்லட் ரயில் திட்டத்துக்கான  பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. 80கி.மீதொலைவுக்கு பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. பிரதமர் மோடியின் வழிகாட்டலின்படி, விவசாயிகளுக்கான ரயில்கள், சிறு, குறு வியாபாரிகளுக்கான ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சரக்குரயில்கள் சரக்குகளை கையாளும் திறன் இன்னும் அதிகரிக்கப்படும். 

இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்
 

click me!