இந்தியப் பொருளாதாரம் 2023-24 நிதியாண்டில் 6.5 சதவீதம் வளர்ச்சி அடையும். உலகளவில் வேகமாகவளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இருக்கும் என்று 2022-23 பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியப் பொருளாதாரம் 2023-24 நிதியாண்டில் 6.5 சதவீதம் வளர்ச்சி அடையும். உலகளவில் வேகமாகவளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இருக்கும் என்று 2022-23 பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதல்நாளான இன்று இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கையை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
2023-24ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்.
உலகளவில் வேகமாக வளரும் பொருளாதாரத்தை இந்தியா கொண்டிருக்கும். உலக நாடுகள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்களையும் சிறப்பாக இந்தியா கையாளும்.
கடந்த 2021-22 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.7% என மதிப்பிடப்பட்டது. நடப்பு நிதியாண்டில் 7 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு ஒப்பிடுகையில் அடுத்த நிதியாண்டு 6.5 சதவீமாகக் குறையும்
உலக நாடுகள் சந்திப்பதைப் போல் இந்தியாவும் நிதிச்சூழல் நெருக்கடியை எதிர்கொள்கிறது. ஐரோப்பாவில் நடக்கும் போரால் சப்ளையில் சிக்கல், ஆனாலும், சிறப்பான நிலையில் இந்தியா இருக்கிறது
வாங்கும் சக்தி அடிப்படையில் இந்தியாவின் பொருளதாரம் உலகளவில் 3வது இடத்திலும், அந்நியச் செலாவணி பரிமாற்ற அடிப்படையில் 5வது மிகப்பெரிய பொருளாதாரத்தையும் கொண்டுள்ளது.
பொருளாதாரம் இழந்ததை ஏறக்குறைய மீட்டெடுத்துள்ளது. கொரோனா பரவல், ஐரோப்பாவில் போர் ஆகியவற்றின்போதும் மெதுவாக இருந்த பொருளாதாரத்தை மீண்டும் உற்சாகப்படுத்தியுள்ளது.
பணவீக்கம் பற்றி பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. கடன் வாங்குவது சிறிது காலத்துக்கு செலவு கூடக்கூடியதாக இருக்கும். பணவீக்கத்தின் அழுத்தம் காரணமாக இந்த சூழல் சிறிது காலத்துக்கு இருக்கும்.
மூலதன முதலீடு அதிகரிப்பு, உள்நாட்டுத் தேவை அதிகரிப்பு போன்றவற்றால் வளர்ச்சி அதிகரித்து, கொரோனா பரவல் மந்தநிலையில் இருந்து இந்தியா வேகமாக மீண்டுள்ளது.
அமெரி்க்க பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை உயர்த்தும்பட்சத்தில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மேலும் நெருக்கடிக்குள்ளாகும்.
உலகளாவிய பொருட்கள், கமாடிட்டி விலை அதிகரித்து இருப்பதால், நடப்பு கணக்குப் பற்றாக்குறை அளவும் அதிகமாகவே இருக்கும். நடப்புக் கணக்குப்பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்தால், ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்திக்கும். மற்றவகையில் வெளிப்புறச் சூழல் மேலாண்மை செய்யக்கூடிய அளவில் இருக்கிறது.
ஏற்றுமதியைப் பொறுத்தவரை நடப்பு நிதியாண்டின் 2வதுபகுதியில் சுமாராக இருக்கிறது. உலகளவில் பொருளாதார வளர்ச்சி குறைவு, ஏற்றுமதிக்கு ஊக்கம் அளிக்காததால், வர்த்தகம் சுருங்கியது.
2023-24ம் ஆண்டில் பெயரளவு பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும்.
அதிகமான நுகர்வு இருப்தால், வேலைவாய்ப்புச் சூழலில் முன்னேற்றம் காணப்படுகிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனியார் துறை முதலீடு அதிகரிப்பது அவசியம்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.