Budget 2023இந்தியாவில் அதிகமாக பட்ஜெட் தாக்கல் செய்த நிதிஅமைச்சர் யார்? நிர்மலா சீதாராமன் எத்தனையாவது பட்ஜெட்?

By Pothy RajFirst Published Jan 31, 2023, 1:30 PM IST
Highlights

இந்தியாவில் இதுவரை அதிகமாக பட்ஜெட் தாக்கல் செய்த நிதிஅமைச்சர் யார் என்பதையும், நிர்மலா சீதாராமன் எத்தனையாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பதையும் காணலாம்.

இந்தியாவில் இதுவரை அதிகமாக பட்ஜெட் தாக்கல் செய்த நிதிஅமைச்சர் யார் என்பதையும், நிர்மலா சீதாராமன் எத்தனையாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பதையும் காணலாம்.

1.  முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்தான் இந்தியாவிலேயே அதிகமான எண்ணிக்கையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 1962 முதல் 1969 வரை நிதிஅமைச்சராக இருந்தகாலத்தில் மொரார்ஜி தேசாய் 10பட்ஜெட்களைத் தாக்கல் செய்துள்ளார்.

2.   காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிதிஅமைச்சராக இருந்த ப.சிதம்பர் 9 பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ளார்.

பொருளாதார ஆய்வறிக்கை எப்படி இருக்கும்? 2023ல் ஜிடிபி 3 ஆண்டுகளில் இல்லாத அளவு குறையும்

3.  முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிதிஅமைச்சராக இருந்போதும், யஸ்வந்த் சின்ஹா நிதிஅமைச்சராக இருந்தபோதும் 8 பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ளனர்.

4. காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் பிரதமர் பிவி நரசிம்மராவ் ஆட்சியில் நிதிஅமைச்சராக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 6 பட்ஜெட்களைத் தாக்கல் செய்யுள்ளார். முன்னாள் நிதிஅமைச்சர் டிடி கிருஷ்ணமாச்சாரியும் 6 பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ளார்.

5. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், யஷ்வந்த் சின்ஹா இருவரும் தொடர்ச்சியாக 5 பட்ஜெட்களைத் தாக்கல் செய்து சாதனைபடைத்துள்ளனர்.

6. 1999ம் ஆண்டுவரை பட்ஜெட் தாக்கல் என்பது பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில் மாலை 5 மணிக்கு தாக்கல் செய்வது ஆங்கிலேயர் காலத்தில்இருந்து கடைபிடிக்கப்பட்டு வந்தது.

7.1999ம் ஆண்டு பாஜக ஆட்சியில் நிதிஅமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா இந்த நடைமுறையை மாற்றி காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். 

பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன? இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்

8. பாஜக ஆட்சியில் நிதிஅமைச்சராக இருந்த அருண் ஜெட்லி பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் நடைமுறையைக் கொண்டு வந்தார். 

9.  மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வது இது 4வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!