
இந்தியாவில் ஸ்மார்ட் வாட்ச்களுக்கான சந்தை கடந்த 2021ம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. பல்வேறு தரப்பட்ட மக்களிடம் இருந்து தேவை அதிகரிப்பால், கடந்த ஆண்டு இறக்குமதி 274 சதவீதம் அதிகரித்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களிடம் உடலைக் கட்டுக்கோப்பாக வைப்பதிலும், ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும் கடந்த சில ஆண்டுகளாகவே விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அதிலும் கொரோனா தொற்றுக்குப்பின் மக்கள் தங்கள் உடல்நலன் மீது கூடுதலாக அக்கறை செலுத்தி வருகிறார்கள். அவர்களின் உடல்நலத்தின் மீது அக்கறையாக இருப்பதற்கு அவர்களுக்கு தொழில்நுட்பமும் பல்வேறு வகைகளில் துணை புரிகின்றன.
குறிப்பாக உடலை ஆரோக்கியமாகப் பராமரிக்க வேண்டும் என நினைப்பவர்களிடையே இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் வாட்ச் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இடையே ஸ்மார்ட் வாட்சுகள் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமடைந்து வருகின்றன.
உடல்நலன் தவிர்த்து ,ரத்த ஆக்ஸிஜன் அளவை (SpO2) இப்போது கண்காணிக்க முடியும் என்பதால் ஸ்மார்ட் வாட்ச் மீதான ஆர்வம் அதற்கான தேவையும் அதிகரித்துள்ளது.
என்ன காரணம்
கடந்த ஆண்டில் மட்டும் ஸ்மார்ட் சந்தை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாக, மினிக்ஸ் இந்தியா எனும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த் குஜ்ஜார்கூறுகையில் “ கடந்த ஆண்டில் ஸ்மார்ட் வாட்ச் சந்தை இந்தியாவில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்கிறது. இறக்குமதி 274 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுமுந்தைய 2020ம் ஆண்டைவிட அதிகமாகும்.
மக்களிடைய உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்ற ஆர்வம், உடல்நலனில் அக்கறை, ஸ்டைலாக இருப்து, தினசரி பணிகளை அறிவுறுத்தி உதவுவது என பல்வேறு காரணங்களுக்காக ஸ்மார்ட் வாட்சை அணிகிறார்கள்.
கடந்த 2021ம் ஆண்டில் மட்டும், போட், ஃபயர் போல்ட், ரியல்மி, அமாஸ்பிட், போட் ஸ்டார்ம் ஆகிய ஸ்மார்ட் வாட்சுகள் அதிகமாக விற்பனையாகியுள்ளன. இந்தியாவின் ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் 80வகையான பிராண்ட்கள் விற்பனையில் உள்ளன, இதில் 10வகையான பிராண்ட்கள் மட்டும் கடந்த ஆண்டில் சந்தையில் அறிமுகமானவை” எனத் தெரிவித்தார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.