மார்ச் 3-இல் இந்தியா வரும் 2022 மேபேக் எஸ் கிளாஸ் - மாஸ் அறிவிப்பை வெளியிட்ட மெர்சிடிஸ்

Nandhini Subramanian   | Asianet News
Published : Feb 14, 2022, 02:32 PM IST
மார்ச் 3-இல் இந்தியா வரும் 2022 மேபேக் எஸ் கிளாஸ் - மாஸ் அறிவிப்பை வெளியிட்ட மெர்சிடிஸ்

சுருக்கம்

2022 மெர்சிடிஸ் மேபேக் எஸ் கிளாஸ் மாடலின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2022 மேபேக் எஸ் கிளாஸ் மாடல் இந்தியாவில் மார்ச் 3 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. முன்னதாக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட எஸ் கிளாஸ் மாடலை கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்தது.  இந்த மாடலின் விலை ரூ. 1.57 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. புதிய மேபேக் எஸ் கிளாஸ் மாடல் இந்திய சந்தையில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் மாடல் ஆகும்.

இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் GLS 600 மாடலுடன் புதிய மேபேக் இணைகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் GLS 600 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 2.43 கோடி ஆகும். சர்வதேச சந்தையில் தலைசிறந்த கார் என்ற பெருமையை பெற்று இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் முன்னதாக இந்திய சந்தையில் இறக்குமதி செய்யப்பட்டது. அப்போது இந்த மாடல் வெறும் 150 யூனிட்கள் மட்டுமே கொண்டுவரப்பட்டன.

புதிய மேபேக் எஸ் கிளாஸ் மாடல் ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் வி8 மற்றும் வி12 என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளன. வி8, 8 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 503 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலமீட்டர் வேகத்தை 4.4 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதில் உள்ள வி12 என்ஜின் முதல் முறையாக ஆல்-வீல் டிரைவ் வசதி கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 612 பி.ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.4 நொடிகளில் எட்டிவிடும். மேலும் அதிகபட்சமாக மணிக்கு 250 கிலமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. 

இந்திய சந்தையில் புதிய மெர்சிடிஸ் மேபேக் எஸ் கிளாஸ் மாடல் பெண்ட்லி மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!