பிரீமியம் எஸ்.யு.வி.-க்கு 'மெரிடியன்' என பெயர் சூட்டிய ஜீப் - வெளியீடு பற்றி எதுவும் சொல்லலையே?

Nandhini Subramanian   | Asianet News
Published : Feb 14, 2022, 01:28 PM IST
பிரீமியம் எஸ்.யு.வி.-க்கு 'மெரிடியன்' என பெயர் சூட்டிய ஜீப்  - வெளியீடு பற்றி எதுவும் சொல்லலையே?

சுருக்கம்

ஜீப் இந்தியா  நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எஸ்.யு.வி. பெயர் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. 

ஜீப் இந்தியா நிறுவனம் தனது புதிய எஸ்..யு.வி. மாடல் மெரிடியன் என அழைக்கப்பட இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடல் முழுமையாக இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மாடலில் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. 

முன்னதாக இந்த 7 சீட்டர் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. 70 பெயர்கள் அடங்கிய பட்டியலில் இருந்து மெரிடியன் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக ஜீப் இந்தியா அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் உள்ள அழகான மாநிலங்கள் மற்றும் கலாச்சாரங்களை ஒன்றிணைக்கும் பாதையை குறிப்பதால் மெரிடியன் எனும் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் புதிய மெரிடியன் தான் ஜீப் நிறுவனத்தின் முதல் 7 சீட்டர் மாடல் ஆகும். "இந்தியாவில் உள்ள அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும்  இந்த எஸ்.யு.வி. மாடலுக்கான சோதனை நடைபெற்றது. இந்த எஸ்.யு.வி. மாடல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செய்துள்ளது. சோதனையில் புதிய மெரிடியன் தலைசிறந்த முடிவுகளை வெளிப்படுத்தியதை நாங்கள் பெருமையாக தெரிவித்துக் கொள்கிறோம்," என ஜீப் இந்தியா தலைவர் நிபுன் ஜெ மஹாஜன் தெரிவித்தார்.  

புதிய மெர்டியன் எஸ்.யு.வி. மாடலில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் பற்றி ஜீப் இந்தியா இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், இந்த மாடலில் 2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனும் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களில் 4WD ஆப்ஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

இத்துடன் 10.25 இன்ச் மெயின் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன், பானரோமிக் சன்ரூஃப். 4-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், முன்புறம் வெண்டிலேட் செய்யப்பட்ட சீட்கள் வழங்கப்படலாம். இந்திய சந்தையில் புதிய ஜீப் மெரிடியன் மாடலின் விலை ரூ. 35 லட்சத்திற்கும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெர்கிறது. இந்த கார் டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்.ஜி. குளோஸ்டர் மற்றும் ஸ்கோடா கோடியக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Gold Rate: நடுத்தர மக்களுக்கு கிடைத்த குட் நியூஸ்.! அடுத்த 6 மாதத்திற்கு தங்கம் விலை குறித்த கவலை வேண்டாம்.!
தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க