
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 81 ஆயிரத்து 500 வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் எதுவும் மஹிந்திராவின் புதிய ஃபிளாக்ஷிப் மாடல்களான XUV700 மற்றும் தார், பொலிரோ நியோ உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்படவில்லை.
சிறப்பு சலுகைகளின் படி அதிக பலன்கள் மஹிந்திராவின் அல்டுராஸ் G4 எஸ்.யு.வி. மாடலுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலை வாங்குவோர் ரூ. 81 ஆயிரத்து 500 வரையிலான பலன்களை பெற முடியும். இந்திய சந்தையில் மஹிந்திராவின் அல்டுராஸ் G4 எஸ்.யு.வி. மாடல் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் எம்.ஜி. குளோஸ்டர் உள்ளிட்டவைகளுக்கு போட்டியாக அமைகிறது.
மஹிந்திரா அல்டுராஸ் G4 மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 31 ஆயிரத்து 500 கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் இதர பலன்கள் வழங்கப்படுகின்றன. மஹிந்திராவின் சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. XUV300 மாடலுக்கு ரூ. 69 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரத்திற்கு இதர பலன்கள் வழங்கப்படுகின்றன.
இந்திய சந்தையில் மஹிந்திராவின் குறைந்த விலை எஸ்.யு.வி. மாடலான KUV100 NXT மாடலுக்கு ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 38 ஆயிரத்திற்கு ரொக்க தள்ளுபடி அடங்கும். எஸ்.யு.வி. மாடல்கள் தவிர ஸ்கார்பியோ மாடலுக்கு ரூ. 34 ஆயிரம் மதிப்பிலான பலன்களும், பொலிரோ எஸ்.யு.வி. மாடல்களுக்கு ரூ. 24 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.