
இந்தியா போஸ்ட் சார்பில் கிராமின் தக் சேவக், ஜிடிஎஸ் பணிக்கான முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்திய அஞ்சல் துறை சார்பில் , கிராமங்களில் செயல்படும் கிராம் தக் சேவக்ஸ் என்ற கிராம தபால் ஊழியர், மற்றும் உதவி தபால் ஊழியர் பணிக்கு அஞ்சல் துறை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. நாடுமுழுவதும் 38ஆயிரத்து 926 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 4 ஆயிரத்து 310 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்தப் பணிக்கு தேர்வு கிடையாது, 10ம் வகுப்பு முடித்திருந்தாலே போதுமானது. மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து பணிவாய்ப்பு வழங்கப்படும்.
மதிப்பெண் அடிப்படை
இந்த பணிக்கு விண்ணப்பித்தவர்கள் முதல் சுற்றில் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணபதாரர்களுக்கு அழைப்புக் கடிதம் அல்லது மின்னஞ்சல் அனுபப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஜூலை 5ம் தேதிக்குள் சான்றிதழ் சரிபார்புக்குச் செல்ல வேண்டும். நாடுமுழுவதுக்கான பணி என்பதால், ஒவ்வொரு மண்டலத்துக்கும் தேதிகள் மாறுபடும்.
இந்தியாபோஸ்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் ஜிடிஎஸ் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறு முடிவைத் தெரிந்து கொள்வது
1. இந்தியா போஸ்ட் அதிகாரபூர்வ இணையதளமான indiapostgdsonline.gov.in தளத்துக்கு செல்ல வேண்டும்
2. ஜிடிஎஸ் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு மண்டலங்கள் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கும். அதில் விண்ணப்பதாரர் தாங்கள் சார்ந்திருக்கும் மண்டலத்தை தேர்வு செய்ய வேண்டும்
3. இந்தியா ஜிடிஎஸ் ரிசர்ல்ட் என்ற பிடிஎப் திறக்கும்
4. அதைக் கிளிக் செய்தால் பிடிஎப் பைல் திறக்கும்.
5. அதில் விண்ணப்பதாரரின் பதிவெண் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அடுத்தக் கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்ல வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த தேதி பற்றி அவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும் அல்லது மின்அஞ்சலுக்கு கடிதம் அனுப்பப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு மண்டலம் வாரியாக தேதி மாறுபடும். ஆனால், அனைத்துவிதமான ஆய்வுகளும் முடிந்து 2022, நவம்பர் 15ம் தேதிக்குள் பணிவாய்ப்பு கிடைத்துவிடும்.
இந்தப் பணிக்கு 18வயதுமுதல் 40 வயதுள்ளவர்கள் விண்ணப்ப அனுமதிக்கப்பட்டது. இதில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் 5 ஆண்டுகள் தளர்வும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வும் அளிக்கப்படுகிறது.
ஊதியம்: கிராம அஞ்சலக ஊழியருக்கு அடிப்படை ஊதியமாக ரூ12 ஆயிரம் நிர்ணயிக்ககப்பட்டுள்ளது. உதவி அஞ்சலக ஊழியருக்கு ரூ.10ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிராம அஞ்சலக ஊழியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு எழுத்துத் தேர்வு இல்லை. 10ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த இரு பணிக்கும் நாடுமுழுவதும் விண்ணப்பங்கள் கோரப்பட்டாலும், அந்தந்த மாவட்ட தலைமை அஞ்சலகங்களுக்கு உட்பட்டுதான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உதாரணமாக மாவட்ட அஞ்சல் நிலையத்துக்கு உட்பட்டு, விண்ணப்பித்தவர்களில் அதிகமான மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்கும். இந்த இரு பணிகளுக்கும் உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கே அதிகமான முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. ஆதலால், உள்ளூரில் அஞ்சல்துறையில் பணியாற்ற விரும்புவோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.