india post gds online :அஞ்சல் துறையில் மெகா வேலைவாய்ப்பு: 39ஆயிரம் காலியிடங்கள் : பெண்களுக்கு கட்டணம் இல்லை

Published : May 03, 2022, 05:15 PM IST
india post gds online :அஞ்சல் துறையில் மெகா வேலைவாய்ப்பு: 39ஆயிரம் காலியிடங்கள் : பெண்களுக்கு கட்டணம் இல்லை

சுருக்கம்

india post gds online : அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், துணை போஸ்ட் மாஸ்டர், தக் சேவாக் ஆகிய 39ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், துணை போஸ்ட் மாஸ்டர், தக் சேவாக் ஆகிய 39ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அஞ்சல் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில்( https://indiapostgdsonline.gov.in) குறிப்பிடப்பட்டுள்ளதாவது. 
அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், துணைபோஸ்ட் மாஸ்டர், தக் சேவாக் ஆகிய 38ஆயிரத்து 926 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி:
கிராம தேவாஸ் பணிக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு முடித்து மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதில் கணிதம், ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். மாநில அரசு, மத்திய அரசு, யூனியன் பிரதேச அரசு சார்பில் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் படித்து சான்று பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக உள்ளூர் மொழியை பேசவும், எழுதவும் தெரி்ந்திருக்க வேண்டும்

ஊதியம் எவ்வளவு
வயது: 18 வயது முதல் 40 வயது நிரம்பியவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கிளை போஸ்ட் மாஸ்டருக்கு குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.12 ஆயிரம், துணை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தக் சேவாக்கு ரூ.10ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

கடைசித் தேதி
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 2022, ஜூன் 5ம் தேதி கடைசித் தேதியாகும். அனைத்து விண்ணப்பங்களும் ஆன்-லைன்(https://indiapostgdsonline.gov.in.) மூலமே அனுப்ப வேண்டும். வேறு எந்த வழியில் அனுப்பினாலும் பரிசீலிக்கப்படாது. 

பெண்களுக்கு கட்டணம் இல்லை

அனைத்து விண்ணப்பதார்ரகளும் விண்ணப்பக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு கட்டணம் ஏதும் இல்லை.
விண்ணப்பம் செய்தவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, அதில் மெரிட் அடிப்படையில் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

வீடு வாங்க போறீங்களா? குறைந்த வட்டியில் கடன் தரும் வங்கிகள் இதோ!
Gold Rate Today (டிசம்பர் 09) : குறைய தொடங்கியது தங்கம் விலை.! சந்தோஷமாக நகை கடைக்கு ஓடிய இல்லத்தரசிகள்.!