சமீபகாலமாக இந்தியாவில் ஐபோன் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது. ஐபோன்களின் உலகளாவிய உற்பத்தியில் 7 சதவீதம் இப்போது இந்தியாவில் தயாராகின்றன.
ஸ்மார்ட்போன் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா பல மொபைல் சாதன கூறுகள் மீதான இறக்குமதி வரிகளை குறைத்து வருகிறது. இது ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளது.
ஆப்பிள் போன்ற உலகளாவிய பிராண்டுகள் சீனாவிலிருந்து விலகி, இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியை மேற்கொள்ள முன்வருவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதற்காக இந்தியாவில் உள்நாட்டு சப்ளையர்கள் அமைப்பை உருவாக்க விரும்புகிறது.
"இந்தியாவில் மொபைல் உற்பத்திக்கான களமாக மாற்றுவதில் முக்கியமான மற்றும் வரவேற்கத்தக்க முடிவு இது" என்று இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கத்தின் தலைவர் பங்கஜ் மொஹிந்த்ரூ தெரிவித்துள்ளார். "குறைந்த கட்டணம் விதிப்பது இந்தியாவை எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதற்கு முக்கியமானது" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இனி Paytm யூஸ் பண்ண முடியாதா? வங்கி சேவையை நிறுத்த ஆர்பிஐ போட்ட அதிரடி உத்தரவு!
ஆப்பிள், செமிகண்டக்டர் உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் மற்றும் பெகாட்ரான், உள்நாட்டு நிறுவனமான டிக்சன் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்கள் அதிக வரிவிதிப்பு இந்தியாவில் உற்பத்திக்கு முன்வரும் வாய்ப்பை 7% குறைப்பதாகக் கூறியுள்ளன.
சமீபகாலமாக இந்தியாவில் ஐபோன் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது. ஐபோன்களின் உலகளாவிய உற்பத்தியில் 7 சதவீதம் இப்போது இந்தியாவில் தயாராகின்றன.
அமெரிக்கா சீனா இடையிலான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சீனாவை நம்பியிருப்பதை குறைப்பதற்கான வழிகளை ஆப்பிள் ஆராய்கிறது. சீனாவில் உள்ள தொழிற்சாலைகளுக்கான மாற்று ஏற்பாட்டை இந்தியாவில் விரைவாக உருவாக்க விரும்புகிறது.
வரிவிதிப்பு மற்றும் கட்டணங்கள் குறைவாக இருந்தால் அது ஏற்றுமதி செய்வதை அதிகளவில் உருவாக்க ஊக்குவிக்கும். மார்ச் 2023 வரையிலான நிதியாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி இரட்டிப்பாகி இருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 11 பில்லியன் டாலர்.
"உள்ளூர் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு உதிரிபாக தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பது இந்தியாவை உலகின் டிஜிட்டல் சாதன உற்பத்திக்கான மையமாக மாற்றும் லட்சியத்தை வலுப்படுத்த இந்தியாவுக்கு உதவும்" என தொழில்நுட்ப வல்லுநர் நவ்கேந்தர் சிங் கூறுகிறார்
சீனாவுக்கு உளவு பார்ப்பதாகப் பிடிபட்ட புறா 8 மாதங்களுக்குப் பின் விடுதலை!