
மாட்டிக்கொண்ட 18 லட்சம் பேர்.......!! நீங்களும் ஒருவராக இருக்கலாம் ....!!!
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்பு, மக்கள் தங்கள் கையில் இருந்த அனைத்து ரொக்க பணத்தையும், தங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்து கொண்டனர். இந்நிலையில், அளவுக்கு மீறி ஒரு குறிப்பிட்ட , வங்கி கனுக்குகளில் மட்டும் பணம் டெபாசிட் ஆகியுள்ளதால், தற்போது அவர்கள் மீது பாய தொடங்கியுள்ளது வருமானவரித்துறை ...
மாட்டிக்கொண்ட 18 லட்சம் பேர்:
அதாவது, 18 லட்சம் வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ.4.17 லட்சம் கோடி சேமிப்பாக போடப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரி வாரியத்தின் சிபிடிடி தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 18 லட்சம் வங்கி கணக்கை வைத்திருப்பவர்களுக்கு குறுஞ் செய்தி எஸ்எம்எஸ் மற்றும் இணையதள முகவரிக்கு விவரம் கோரி தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இதுவரை எடுக்கப்பட்ட முயற்சி :
இதுவரை 13 லட்சம் பேருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 5 லட்சம் தகவல் அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆய்வு :
மேலும் 10 லட்சம் வங்கிக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.