ikea bangalore: இந்தியாவில் Ikea india ஸ்டோருக்கு கோடிகளில் இழப்பு : கொரோனா லாக்டவுனால் நஷ்டம் அதிகம்

By Pothy Raj  |  First Published Jun 27, 2022, 10:12 AM IST

ikea bangalore: இந்தியாவில் 4 நகரங்களில் கடைதொடங்கிய ஸ்வீடனின் ஐகேஇஏ நிறுவனத்துக்கு 2021-22 நிதியாண்டில் நிகர இழப்பு ரூ.807.50 கோடியாக அதிகரித்துள்ளது என அந்தநிறுவனம்தெரிவித்துள்ளது.


இந்தியாவில் 4 நகரங்களில் கடைதொடங்கிய ஸ்வீடனின் ஐகேஇஏ நிறுவனத்துக்கு 2021-22 நிதியாண்டில் நிகர இழப்பு ரூ.807.50 கோடியாக அதிகரித்துள்ளது என அந்தநிறுவனம்தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

கொரோனா லாக்டவுன் காரணமாக வர்த்தகம் பாதி்க்கப்பட்டதால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 2020-21ம் நிதியாண்டில் ஐஇகேஏ நிறுவனத்துக்கு இழப்பு ரூ.720.70 கோடியாக இருந்த நிலையில் கடந்த நிதியாண்டில் இழப்பு ரூ.807 கோடியாக அதிகரித்துள்ளது. அதேநேரம், 2020-21ம் ஆண்டில் ஐகேஇஏ நிறுவனத்தின் விற்பனை 7.36சதவீதம் அதிகரித்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பெங்களூரு IKEA கடையில் கட்டுக்கடங்காத கூட்டம்: 3 மணிநேரம் வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்

2020ம் ஆண்டு மார்ச் மாதத்தோடு முடிந்த நிதியாண்டில் ஐஇகேஏ நிறுவனத்தின் விற்பனை ரூ.566 கோடியாக இருந்தது விற்பனை 64.68 சதவீதம் அளவுக்கு வளர்ந்தது. ஆனால், 2021-22ம் ஆண்டில் விற்பனை வளர்ச்சி குறைந்த வேகத்தில்தான் இருந்தது.
கொரோனா பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுன் நடவடிக்கையால் மக்கள் நடமாட்டம்,புழக்கம் குறைந்தது. இதனால் புதிதாகத் திறக்கப்பட்ட ஐஇகேஏ ஸ்டோரிலும் விற்பனை குறைந்தது. அதுமட்டுமல்லாமல் கொரோனாவில் 2020-21ம் ஆண்டில் ஐஇகேஏ நிறுவனம் தனது கடையை விரிவாக்கம் செய்யவும், விற்பனையை அதிகப்படுத்த செய்யஇருந்த நடவடிக்கைகளும் கொரோனாவில் பாதிக்கப்பட்டது. 

இருப்பினும் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக கொரோனா காலத்தில் வறுமையில் இருப்போர், ஏழைகள், சாலைஓரம்வசிப்போருக்கு இலவச உணவுப் பொருட்களை வழங்குதல், இலவச ரேஷன் பொருட்கள், மருத்துவக் கருவிகள், மருந்துகள்வழங்குதல் போன்றவற்றையும்செய்தது. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யவும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

2021-22 நிதியாண்டில் கொரோனாவின் தாக்கம்அதிகமாக இருந்த நேரத்தில் தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா அரசுகள் கேட்டுக்கொண்டதன் பெயரில், மும்பையிலும், ஹைதராபாத்திலும் நவி மும்பையிலும் செயல்பட்டு வந்த தனது கிளைகளை ஐஇகேஏ நிறுவனம் தற்காலிகமாக மூடியது. மேலும், பெங்களூருவில் ஆன்லைன் மட்டும் விற்பனை மட்டும் நடந்து வந்தது.

FD மூலம் அதிக வருவாய் வேணுமா? இந்த 4 விஷயத்தை மறக்காம செய்யுங்க, குபேரன் கொட்டுவாரு..

ஐகேஇஏ நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் “ இந்தியாவில் நாங்கள் நீண்டகாலமாக இருக்கறோம். இந்தியச்சந்தை எங்களுக்கு முக்கியமானது, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக முதலீட்டைஅதிகப்படுத்துவோம். மக்களுக்கு குறைந்தவிலையில், நீண்டகாலம்உழைக்கக் கூடிய, தரமான பொருட்களை வழங்குவோம்” எனத் தெரிவித்தார்.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வீட்டுக்குத் தேவையான பர்னிச்சர்களைத் தயாரிக்கும் ஐகேஇஏ நிறுவனம் இந்தியாவில் 2018ம் ஆண்டிலிருந்து கிளைகளைத் தொடங்கி வருகிறது. முதலில் ஹைதராபாத்திலும் அதன்பின் மும்பையில் நவி மும்பை, மும்பை ஓர்லியிலும், தற்போது பெங்களூரிவில் நாகசந்திரா பகுதியிலும் கிளைகளைத் தொடங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4 கிளைகளை ஐகேஇஏ நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

ஷாக்ஆகாதிங்க! 220 ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.ஒரு கோடிக்கு மேல் சம்பளம்: எந்த நிறுவனம் தெரியுமா?

 அதில் 4-வதாக பெங்களூருவில் உள்ள நாகசந்திரா பகுதியில் கடந்த 22ம் தேதி கிளையைத் திறந்தது. பெங்களூருவின் நாகசந்திரா பகுதியில் 12 ஏக்கர் பரப்பளவில், 4.60 லட்சம் சதுரடியில் கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு 7ஆயிரத்துக்கும் அதிகமான வீட்டுக்குத் தேவையான பர்னிச்சர்கள் உள்ளன. 

click me!