இவ்ளோ ஈஸியா….! மியூசுவல் ஃபண்ட் வாங்குற கமிஷனை குறைக்கலாமா

First Published May 4, 2018, 3:01 PM IST
Highlights
How To save Mutual fund commission


மியூசுவல் ஃபண்ட் வாங்கி விற்கும் நிறுவனத்துக்கு  அந்த நிதியை மேலாண்மை செய்தற்காக கொடுக்கவேண்டிய கமிஷன் தான் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ (Expense ratio) மியூசுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது கவனிக்கவேண்டிய முக்கிய அம்சங்களில் இதுவும் ஒன்று.

இது பொதுவாக இரண்டு முதல் மூன்று சதவீதம் வரை இருக்கும். ஒவ்வொரு வருடமும் ஃபண்ட் லாபம் அல்லது நஷ்டத்தில் சென்றால் கூட பிடித்தம் செய்யப்படும்.

இந்த சதவீதம் என்பது நம்மை சேர்த்து விடும் ஏஜெண்ட்களூக்கு வழங்கப்படும் கமிசன் தொகையையும் சேர்த்துதான். நாம் முதலீடு செய்யும் தொகையில் ஒரு சதவீதம் வரை ஏஜெண்ட்டுகளுக்கு கமிசனாக வழங்கப்படுகிறது.

இதைக்குறைப்பதற்காக மியூசுவல் ஃபண்ட் நிறுவனங்கள்  Direct Plan என்ற முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இவ்வாறான Direct Plan ல் முதலீடு செய்வதால் நமது முதலீட்டில் 1% வரை சேமிக்கலாம் எக்ஸ்பெண்ஸ் ரேஷியோ ஒன்றரை சதவீதம் வரை குறைய வாய்ப்புண்டு.

ஒரு சதவீதம் என்பது சிறியதாக தோன்றினாலும் சீரான முதலீட்டு திட்டம் (SIP) முறையில் மாதந்திரமோ அல்லது நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வபர்களுக்கு இந்த திட்டம் அதிகம் பலனளிக்கும்.

எடுத்துக்காட்டாக ஒரு லட்ச ரூபாயை முயூசுவல் ஃபண்டில் 15 ஆண்டுக்கு என போடும் போது அது நிதி மேலாண்மையாளர் வழியாக போகும்போது 15 ஆண்டுக்குப் பிறகு 7.15 லட்சம் கிடைக்கும். அதுவே Direct Planல் 15 வருட்த்திற்கு பிறகு 8.15 ஆக கிடைக்கும்.

ஒருலட்சம் கமிஷன் பணம் நமக்கு லாபந்தானே

 

click me!