G-Pay மூலம் ரூ.1 லட்சம் வரை கடன் பெறுவது எப்படி?

By Dhanalakshmi G  |  First Published Oct 24, 2024, 5:13 PM IST

Google Pay மூலம் ரூ.1 லட்சம் வரை தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். பரிவர்த்தனை மற்றும் கிரெடிட் ஸ்கோரின் அடிப்படையில் கடன் வழங்கப்படும். ஆதார், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் தேவை.


இந்தியாவில் ஜிபே முறை அமலுக்கு வந்த பின்னர் பெட்டிக் கடை, பூக்கடைகளிலும் பண பரிமாற்றத்திற்கு இதைத்தான் பயன்படுத்துகின்றனர். பணம் அனுப்புவதற்கு என்று இருந்தது மாறி தற்போது இதன் மீது நீங்கள் கடனும் வாங்கலாம். எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

Google Pay இல் Google India ஒரு புதிய கடன் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தகுதியான வாடிக்கையாளர்களுக்கு அவர்களது பயன்பாட்டின் மூலம் நேரடியாக ரூ.1 லட்சம் வரையிலான தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கிறது. கடன் தொகை பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செல்ல வேண்டியது இல்லை. 

Tap to resize

Latest Videos

undefined

இந்த முறையில் கடன் பெறுவதற்கு யார் விண்ணப்பிக்கலாம், உங்களுக்கு என்ன ஆவணங்கள் தேவை, எப்படி விண்ணப்பிக்கலாம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் G-Pay கடனுக்கான வட்டி விகிதங்களை என்னவென்று பார்க்கலாம். அவசரமாக கடன் தேவைப்படுவோருக்கு இது சிறந்த வழியாகும்.


ஜி-பே கடன் திட்டம் என்றால் என்ன?
நடப்பாண்டு நிலவரப்படி, Google Pay பயனர்கள் ரூ. 1 லட்சம் வரை தனிநபர் கடனைப் பெறுவதை Google India எளிதாக்கியுள்ளது. நீங்கள் அடிக்கடி Google Payயைப் பயன்படுத்தி வந்தால், இந்தச் சேவையின் மூலம் விரைவாக நிதியைப் பெறலாம். ஏராளமான ஆவணங்களை நிரப்பவோ அல்லது வங்கிக்குச் செல்லவோ தேவையில்லை. 

G-Pay கடன் எவ்வாறு வேலை செய்கிறது?
Google Pay பயனர்கள் வழக்கமான கடன் விண்ணப்பங்களை நிரப்ப வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, அவர்களது பரிவர்த்தனை மற்றும் கிரடிட் ஸ்கோரின் அடிப்படையில் கடன் வழங்கப்படும். பேப்பர் வேலையே இல்லை. கூகுள் ஆப் மூலமே விண்ணப்பிக்கலாம். Google Payயின் கூட்டு வர்த்தக வங்கிகளான DMI வங்கி, IDFC First Bank மற்றும் Federal Bank ஆகியவற்றிலிருந்து பணம் கிடைக்கும். பயனர்கள் Google Pay ஆப்ஸ் மூலம் மாத தவணைகளை திருப்பி செலுத்தலாம். 

Google pay-வில் கடன் பெற என்ன தகுதி:
குறிப்பாக வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு Google Pay செயலி பயன்படுத்தவும்.
நல்ல கிரெடிட் ஸ்கோரை பராமரிக்கவும்.
வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் ஏற்கனவே கடன் இருக்கக் கூடாது. 
நிலையான வருமானத்திற்கான ஆதாரங்களை காட்ட வேண்டும்.  

Google Pay கடன் விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள்:

Google Pay தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பது எளிது. விண்ணப்பிக்க, பின்வரும் தேவையான ஆவணங்களை வழங்க வேண்டும்:

உங்கள் ஆதார் அட்டை விவரங்கள் (அட்டையில் காட்டப்பட்டுள்ள எண் மற்றும் பெயர்).
பான் கார்டு விவரங்கள்.
உங்கள் வங்கி கணக்கு தகவல் மற்றும் IFSC குறியீடு.
உங்கள் Google Pay கணக்குடன் மொபைல் எண் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.


Google Pay மூலம் தனிநபர் கடன் பெற விண்ணப்பிக்கும் முறை: 

* உங்கள் மொபைலில் Google Pay ஆப் திறந்து உள்நுழையவும்.
* பிசினஸ்  அல்லது payment tab கீழ் இருக்கும் லோன் செக்ஷன் செல்லவும் 
* நீங்கள் தகுதி பெற்றவர் என்றால், உங்கள் பரிவர்த்தனை வரலாறு மற்றும் கிரெடிட் ஸ்கோர் அங்கே கொடுக்கப்பட்டு இருக்கும். 
* தொகை, வட்டி விகிதங்கள் மற்றும் திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் உள்ளிட்ட கடன் விவரங்களைச் சரிபார்க்கவும்.
* இதற்கு ஒப்புக் கொண்டால், கடன் விண்ணப்பத்தைத் தொடங்க இணைப்பைக் கிளிக் செய்யவும்.
* உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு எண்கள், வங்கி கணக்கு எண் மற்றும் IFSC குறியீடு போன்ற தேவையான விவரங்களை வழங்கவும்.
* திருப்பிச் செலுத்தும் திறனுக்கு ஏற்ற EMI திட்டத்தை தேர்ந்தெடுத்து, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும்.
* நீங்கள் பதிவு செய்து இருக்கும் மொபைல் எண்ணுக்கு ஓடிபி (OTP) அனுப்பப்படும். உங்கள் விண்ணப்பத்தை உறுதிப்படுத்த இந்த OTP ஐ சேர்க்கவும்.
* சரிபார்த்த பிறகு, கடன் தொகை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். ஜிஎஸ்டி மற்றும் புராசசிங் கட்டணம் இருந்தால் கழித்துவிட்டு அனுப்புவார்கள். 

click me!