தரமான வீடா ? இனி உங்களை யாரும் ஏமாற்ற முடியாது..! சுவருக்குள் அடங்கியுள்ள எல்லா பொருட்களையும் வெளிச்சம் போட்டு காண்பிக்கும் புது டெக்னிக்..!

By ezhil mozhiFirst Published Jan 28, 2019, 2:53 PM IST
Highlights

வலிமையான செங்கல் சுவருக்கு ஒரு புறத்தில் அல்லது மறுபக்கத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள புதிய வகையான தொழில்நுட்பம் அறிமுகமாகி உள்ளது.

தரமான வீடா ? இனி உங்களை யாரும் ஏமாற்ற முடியாது..!  சுவருக்குள் அடங்கியுள்ள எல்லா பொருட்களையும் வெளிச்சம் போட்டு காண்பிக்கும் புது டெக்னிக்..! 

வலிமையான செங்கல் சுவருக்கு ஒரு புறத்தில் அல்லது மறுபக்கத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள புதிய வகையான தொழில்நுட்பம் அறிமுகமாகி உள்ளது. கலிபோர்னியா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள ஒருவகையான ட்ரோன்கள் மூலம் இதனை கண்டுபிடிக்க முடியும்.

செங்கல் சுவருக்கு ஒரு புறமிருந்து முதல் ட்ரோன் அனுப்பும் wifi அலைகளை மறுபக்கம் உள்ள இரண்டாவது ட்ரோன் பெற்றுக்கொள்ளும். அந்த அலைகள் செங்கல்லை  ஊடுருவி செல்வதன் மூலம் சுவருக்குள் முன்னதாக வைக்கப்பட்டுள்ள பொருட்கள் பற்றி அறிய முடியும்.

அதாவது wifi அலைகள் கடந்து செல்லும்போது ஏற்படும் மாற்றம் மற்றும் இழப்பு ஆகியவற்றைக் கணக்கிட்டு உள்ளே இருக்கும் பொருட்களை கச்சிதமாக தெரிய படுத்தும். மேலும் கட்டிட இடிபாடுகளில் யாரும் சிக்கியுள்ளார்களா என்பதையும், கட்டிடங்களில் உருவாகும் விரிசல்கள் பற்றியும் சுலபமாக இந்த முறையை பயன்படுத்தி தெரிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

இதன் மூலம், நாம் வாங்க உள்ள வீடு அல்லது பெரும் கட்டிடம் எதுவாக இருந்தாலும் அதன் தன்மையை எளிதில் தெரிந்துக்கொண்டு அதன் தரத்தை தீர்மானிக்கலாம்.

click me!