Honda NT1100 : பிரீமியம் பட்ஜெட்டில் டூரர் மோட்டார்சைக்கிளை இந்தியா கொண்டு வரும் ஹோண்டா?

By Kevin KaarkiFirst Published Feb 24, 2022, 11:00 AM IST
Highlights

ஹோண்டா நிறுவனம் விரைவில் NT1100 அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஹோண்டா நிறுவனம் NT1100 ஸ்போர்ட்ஸ் டூரர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. சர்வதேச சந்தையில் NT1100 மாடல் லாங்-டிராவல் சஸ்பென்ஷன் உடன் டூரர் மாடலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடல் CRF1100L ஆப்ரிகா டுவின் மோட்டார்சைக்கிளை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. காப்புரிமை பெறுவதால் இந்த மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் என உறுதியாக எடுத்துக் கொள்ள முடியாது. 

சர்வதேச சந்தையில் ஹோண்டா NT1100 மேனுவல் மாடலின் விலை 11,999 யூரோக்கள், DCT வேரியண்ட் விலை 12,999 யூரோக்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை இந்திய மதிப்பில் முறையே ரூ. 12.20 லட்சம் மற்றும் ரூ. 13.22 லட்சம் ஆகும். இரு மாடல்களும் ஆப்ரிக்கா டுவின் மாடலை விட குறைவு தான். இந்தியாவில் அறிமுகமாகும் பட்சத்தில் புதிய ஹோண்டா  NT1100 விலை ரூ. 14 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

புதிய ஹோண்டா  NT1100 மாடலில் 1084சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 102 பி.ஹெச்.பி. திறன், 104 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு DCT அல்லது 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் குயிக்‌ஷிஃப்டர் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

இத்துடன் முன்புறம் 310mm floationg டிஸ்க், பின்புறம் ஒற்றை 256mm டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. சஸ்பென்ஷனிற்கு முன்புறம் 43mm ஷோவா USD ஃபோர்க், பின்புறம் ஷோவா மோனோஷாக் யூனிட், 150mm டிராவல் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 175mm அளவிலும், சீட் உயரம் 820mm அளவிலும் இருக்கிறது.

click me!