GOLD RATE TODAY : வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!

By vinoth kumarFirst Published Feb 24, 2022, 10:42 AM IST
Highlights

உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.108 உயர்ந்து ரூ. 4,827-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.864 உயர்ந்து ரூ.38,616-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 70.60-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 70,600 விறப்னை செய்யப்படுகிறது. 

click me!