Gas Cylinder: வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை புதிய உச்சம்.. கலக்கத்தில் பொதுமக்கள்..!

Published : May 07, 2022, 07:16 AM ISTUpdated : May 07, 2022, 07:17 AM IST
Gas Cylinder: வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை புதிய உச்சம்.. கலக்கத்தில் பொதுமக்கள்..!

சுருக்கம்

சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, 14.2 கிலோ எடைக்கொண்ட சிலிண்டர் விலை ரூ.1,000-ஐ கடந்துள்ளது. 

எண்ணெய் நிறுவனங்கள்

சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. 

சிலிண்டர் விலை உயர்வு

இந்நிலையில், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1015.50ஆக விற்பனை செய்யப்படுகிறது. சில மாதங்களாக ரூ.917ஆக நீடித்து வந்த நிலையில் வீட்டு உபயோக சிலிண்டல் விலை கடந்த மாதம் ரூ.50 ரூபாய் உயர்ந்து ரூ.967ஆக விற்பனையானது. தற்போது ரூ.50 உயர்வை அடுத்து சிலிண்டர் விலை ரூ.1000 கடந்துள்ளது பொதுமகக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 8 மாதங்களில் கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 உயர்ந்துள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்து வரும் நேரத்தில் சிலிண்டர் விலை உயர்வால் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர். 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

புதிய தொழிலாளர் சட்டத்தால் 'டேக் ஹோம்' சம்பளம் குறையுமா? மத்திய அரசு விளக்கம்!
அடேங்கப்பா! ரயிலில் மூத்த குடிமக்களுக்கு இவ்வளவு சலுகையா.. முழு விவரம்! நோட் பண்ணிக்கோங்க!